2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம்; அதிஸ்டம் யாருக்கு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 05 ஆம் தேதி நிகழவுள்ளது.

இந்த சந்திர கிரகணமானது துலாம் ராசியின், சுவாதி நட்சத்திரத்தில் நிகழவுள்ளது. ஒரு ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழும்.

2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம்; அதிஸ்டம் யாருக்கு! | Chaturgraha Yoga Formed After 12 Years

கிரகணங்கள் ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தில் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது. கிரகணங்களானது மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே சமயம் சந்திர கிரகணத்தன்று சதுர்கிரக யோகமும் உருவாகவுள்ளது. இந்த யோகமானது 12 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் உருவாகிறது.

4 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சதுர்கிரக யோகத்தின் போது, சூரியன், குரு, ராகு மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்களும் மேஷ ராசியில் இருக்கும்.

2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம்; அதிஸ்டம் யாருக்கு! | Chaturgraha Yoga Formed After 12 Years

இதனால் இந்த சந்திர கிரகணமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த கிரகணத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள்.

அதிர்ஷ்டம் பெறவுள்ள 3 ராசிக்காரர்கள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சிறப்பானதாக இருக்கும். இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

பல புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நற்பலன்களை வாரி வழங்கும். இக்காலத்தில் திடீரென்று நல்ல பண ஆதாயம் கிடைக்கும். காதலிப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

உங்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இக்காலத்தில் திட்டமிட்டு செய்யும் வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் மங்களகரமானதாக இருக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சதுர்கிரக யோகத்தினால், குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும்.