மகிழ்ச்சிக்கடலில் மூழ்கப்போகும் 2 ராசியினர்..! இவர்களுக்கு இனி கூடுதல் பலனாம் – இன்றைய ராசி பலன்கள்

மங்கலகரமான கோபகிருது வருடம் சித்திரை மாதம் 20 ஆம் நாள் புதன்கிழமை (2022 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி).

ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புண்ணியம் சேர்க்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் வாயாலேயே நீங்கள் கெடப் போகிறீர்கள் எனவே கவனம் வேண்டும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனநிறைவுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களில் நல்லவர்களை இனம் கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவரையும் நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுயமாக முடிவு எடுக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற போகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய விஷயங்களில் பங்கேற்க கூடிய நல்ல வாய்ப்புகளை பெற போகிறீர்கள். குடும்ப அமைதிக்கு விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய எண்ணங்கள் தோன்றும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடா முயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுக்கப் போகிறது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் திக்கு முக்காட செய்யும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கப் போகிறது. புதிய விஷயங்களை ஆற போடுங்கள். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனி போர் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொழில் சம்பந்தமான சிறு சிறு மாற்றங்களை செய்யக்கூடிய எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகஸ்தர்கள் அமைதியுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்: விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரக்கூடும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்கோபம் தவிர்ப்பது நல்லது.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி பேசியே பெரிதாக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய ஊழியர்களை நியமிக்கும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்களில் ஏமாற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. தேவையில்லாத வெளி நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப மகிழ்ச்சிக்காக சிலவற்றை நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் பகையை வளர்க்காதீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் நல்ல நிகழ்வாக காண இருக்கிறீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மன கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் மெல்ல மறைய ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்.