மயில், மயிலிறகு இந்த இரண்டில் எதைப் பார்த்தாலும் நம்முடைய மனது சாந்தமடையும், சந்தோஷமடையும். அழகாக இருக்கும் இந்த மயிலிறகில் அப்படி என்னதான் ரகசியம் இருக்கிறது.
மயிலிறகை பிடிக்கவில்லை என்று ஒருவரால் கூட சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பேரழகை கொண்ட இந்த மயிலிறகை நம்முடைய வீட்டில் எதற்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சொல்லும் அழகான பதிவுதான் இது.
மயிலிறகைப் போல இந்த பதிவும் அழகாகத்தான் இருக்கும். இந்த மயிலிறகை உங்கள் வீட்டில் வைத்தால் உங்கள் வீடும் அழகாக மாறும். இந்த அழகான பதிவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருந்தால் தொடர்ந்து படியுங்கள்.
பணம் தரும் மயிலிறகு பரிகாரம்:
வெறும் பணத்திற்காக மட்டுமல்ல, பணத்தைத் தாண்டி நிறைய நல்ல விஷயங்களை, நேர்மறை ஆற்றலை கொடுக்கக் கூடிய சக்தி இந்த மயில் இறகுக்கு உண்டு. உதாரணத்திற்கு அந்த காலத்திலேயே குழந்தைகள் இந்த மயிலிறகை புத்தகத்தில் வைத்தால், குட்டி போடும் என்று சொல்லுவார்கள்.
மயில் குட்டி போடாது, இருந்தும் பெரியவர்கள் மயிலிறகை புத்தகத்தில் வை என்று சொல்லுவார்கள். இந்த மயிலிறகை புத்தகத்தில் வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து பிள்ளைகள் நன்றாக படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மயிலிறகுக்கு இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல் புத்தகத்தில் பதியும். ஆக இன்றும் கூட நீங்கள் ஒரு மயிலிறகு எடுத்து உங்கள் குழந்தைகள் படிக்கும் புத்தகம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கக்கூடிய இடத்தில் வைக்கலாம்.
புத்தகம் அடுக்கி வைத்திருக்கும் கப்போரில் வைக்கலாம். குழந்தைகள் பையில் வைக்கலாம். அவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் வர இந்த மயிலிறகு சின்ன உதவி செய்யும். அடுத்தபடியாக வரவேற்பறையில் அழகிற்காக இந்த மயில் இறகை அப்படியே சுவற்றில் ஒட்டி வையுங்கள்.
அப்படி இல்லை என்றால் ஒரு ஜாடியில் மயிலிறகை நிக்க வையுங்கள். இந்த மயிலிறகை பார்க்க பார்க்க வீட்டில் இருப்பவர்களுடைய மனது எப்போதும் அமைதியாக நிறைவாக இருக்கும். கோவமே வராது. அது மட்டும் அல்லாமல் எதிர்மறையாற்றலின் தாக்கமும் கண் திருஷ்டியோ நம் குடும்பத்திற்கு விழாமல் இருக்கும். உதாரணத்திற்கு நாம் இன்னொரு விஷயத்தை கூட நினைவு கூறலாம்.
மயிலிறகால் தலையை வருடி ஏதோ ஒரு மந்திரத்தை சொல்லி தூபம் போட்டால் உடம்பை பிடித்த பீடை நீங்கும் என்று ஒரு நம்பிக்கையும் நம்மிடத்தில் இருக்கிறது. அந்த காலத்தில் ராஜாக்கள் விசிறி ஆகவும் இந்த மயிலிறகை பயன்படுத்தினார்கள். காரணம் இந்த காற்று நல்ல தூக்கத்தை தரும்.
மன அமைதியை தரும். சரிங்க இந்த மயிலிறகை பணவரவுக்கு எப்படி பயன்படுத்துவது? சின்னதாக ஒரு மயிலிறகை பர்ஸில் வைக்கலாம். சின்னதாக ஒரு மயிலிறகை பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் நகை வைக்கும் இடத்தில் வைக்கலாம். எப்படி தெரியுமா.
அந்த மயில் கண்ணுக்கு மேலே பணம் இருக்க வேண்டும். மயில் கண்ணும் பணமும் ஒட்டியபடி இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது உங்களுடைய வீட்டில் இந்த பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
நகையை அடமானம் வைத்திருக்கலாம். வீட்டு பத்திரம், நில பத்திரம் ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் அடமானம் வைத்திருக்கலாம்.
அந்த பத்திரத்திற்கு நடுவே ஒரு மயிலிறகை வையுங்கள். நீங்கள் அடமானம் வைத்த பொருளை சீக்கிரம் மீட்டெடுப்பதற்கு உண்டான வாய்ப்புகளும் பணவரவும் உங்களைத் தேடி வரும். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.