மங்கலகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2022 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி).
ஒவ்வொரு ராசிகளுக்குமான நாளைய ராசி பலன்கள்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான நாளைய ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது. சுய தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் தொல்லைகள் பிரச்சனை கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நாசுக்காக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த முயற்சிகள் காலதாமதம் ஆனாலும் வெற்றி தரும் எனவே மனதை தளர விடாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளி வட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் கண்மூடித்தனமாக யோசிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் வரக்கூடும் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் தெளிவான முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளுக்கு முடிவு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுமையை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது உற்சாகம் இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. பிரிந்த ஒருவரை நினைக்க வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வழிபாடுகளில் கூடுதல் நம்பிக்கை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பிறந்தவர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்ப அமைதிக்கு சிந்தித்து செயல்படுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் பணம் கையில் இருக்கிறது என்பதால் தாம் தூம் என்று செலவு செய்யாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூக சிந்தனை ஓங்கி காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் நிறைந்த நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே வருவது வரட்டும் என்று விட்டுவிடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தாராளமான மனப்பான்மையுடன் செய்வது நல்லது. நண்பர்களின் உதவிக்கரம் தகுந்த சமயத்தில் கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களால் பலன்கள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. தேவையற்ற மனக் குழப்பங்களை தவிருங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் பகை வளர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களை நீங்களே சில விஷயங்களில் மாற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்ளக்கூடிய தைரியம் பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகுவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.