3 நாட்களில் இடம் மாறும் செவ்வாய்! ராஜயோகத்தை பெறும் 3 ராசிகள்! யாருக்கெல்லாம் விபரீத யோகம் தெரியுமா..!

செவ்வாய் மே 10 ஆம் தேதி கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அதன்படி சக்தி வாய்ந்த கிரகமான செவ்வாய் ஜூலை 1, 2023 வரை இதே ராசியில் தான் இருப்பார். இந்த பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி, இயக்கம், வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என அனைத்து நிலைகளும் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதம் (மே) 10 ஆம் தேதி 12 ராசிக்காரர்களுக்கும் மிகவும் சுபமாக இருக்கப் போகிறது.

இந்த நாளில் செவ்வாய் கிரகம் கடக ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். தற்போது செவ்வாய் ஜூலை 1, 2023 வரை இதே ராசியில் தான் இருப்பார். இதன் பிறகு சூரியனுக்கு சொந்தமான சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடைவார்.

இந்த பெரிய கிரகத்தின் பெயர்ச்சி, மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது. அதன்படி இந்த ராசிக்காரர்களுக்கு வருகிற ஒரு மாதம் செல்வச் செழிப்பு மழை பெய்யும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி 2023:

மே 10ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் கடகத்தில் பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். இனி 45 நாட்களுக்கு கடகத்தில் நீசமடைந்து தனது சக்தியை இழந்து காணப்படுவார்.

மிதுன ராசி:

மிதுன ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் நல்ல பலன்களைத் தரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். அத்தகைய சூழ்நிலையில், திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உங்கள் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பிரகாசிக்கும். இதுவரை வந்த அனைத்து தடைகளும் உங்களை விட்டு ஒரேடியாக விலகிவிடும் . உங்களுக்கு பண பலன்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் அதிர்ஷ்டத்தை தரும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும். மூத்தவர்கள் மற்றும் இளையவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் மூலம் பண பலன்கள் கிடைக்கும். ஆனால் அலுவலகத்திற்கும் குடும்பத்திற்கும் இடையில் சமநிலையை உருவாக்குவது உங்களுக்கு முக்கியம். இந்த நேரத்தில், உங்கள் தந்தையின் ஆதரவையும் பெறுவீர்கள்.

கடக ராசி:
இந்த ராசியின் லக்ன வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடைகிறார். இது உங்கள் ஆளுமையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நம்பிக்கையையும் அதிகரிக்கும். சிரமங்கள் உங்கள் வழியிலிருந்து விலகிச் செல்வதைக் காணலாம்.

வாழ்க்கை துணையும் பதவி உயர்வு பெறலாம். அலுவலகத்தில் அதிக உரிமைகளைப் பெறுவீர்கள். பதவியும் உயரும். கூட்டாண்மை மூலம் லாபம் கிடைக்கும்.