இன்பக்கடலில் மூழ்கப்போகும் 2 ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட யோகம் தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை அடைந்து காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு இடம் கொடுக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையில்லாத விமர்சனங்களுக்கு ஆளாக வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பலமே பலவீனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பண விஷயத்தில் ஏமாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய அனுபவங்களை சந்திக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளில் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை அடைய காலதாமதம் ஆகலாம்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணவரவு சிறப்பாக இருக்கப் போகிறது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் சுமூகமாக முடியும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையில்லாமல் கடிந்து கொள்ளாமல் மற்றவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஈகோ மேலோங்கி காணப்படும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய அமைப்பாக உள்ளது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முன்கோபம் தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை கவர்வீர்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வெற்றியடைய கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் பெரியவர்கள் பேச்சை தட்டி கழிக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பாதியில் நின்ற வேலைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களின் சேர்க்கைக்கு வித்திடுவார்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தகாத நண்பர்களால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் கவனம் வேண்டும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே பேச்சில் கூடுதல் அக்கறை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய யுத்திகளை கையாளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடம் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நல்ல குணம் வெளிப்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு தானாகவே சென்று உதவி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றம் காணக்கூடிய அமைப்பாக உள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களுடன் விவாதங்களை தவிருங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழுபறியாக இருந்த விஷயங்கள் சுறுசுறுப்பாக நடக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடைய ஆதரவை பெற முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து ஏமாறாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமயோஜித புத்தியுடன் செயல்படுவீர்கள்.