என்னுடைய வாழ்க்கையே இடுண்டு போய்விட்டது. இனிமேல் வாழ்க்கையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. கஷ்டத்திற்கு மேல் கஷ்டம். அடி மேல் அடி.
வாழ வழி தெரியாமல் இந்த பூமியில், நீங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு நிற்கதியாக நின்றாலும் சரி, அந்த முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு பூஜையை மட்டும் செய்தால் போதும்.
வாழ்வதற்கு உண்டான வழியை அந்த முருகப்பெருமான் நிச்சயம் உங்களுக்கு காட்டிவிடுவார். சொல்லப்போனால் அந்த முருகப்பெருமானே உங்கள் கனவில் வந்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது.
அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இருண்டு போன உங்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்கப் போகும் அந்த பூஜையை எப்படி செய்வது? முருகப்பெருமானை நினைத்து இந்த ஆன்மீகம் பதிவை தொடர்வோம் வாருங்கள்.
கஷ்டத்தைப் போக்கும் முருகப்பெருமானுக்கு பிடித்த பூஜை:
முருகப்பெருமனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம் என்ன தெரியுமா.
தமிழ், அதற்கு பிறகு பிடித்த விஷயம் என்ன தெரியுமா. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.
இந்த இரண்டும் முருகப்பெருமானின் இரண்டு கண்கள் என்று நாம் சொல்லலாம்.
முருகப்பெருமானின் பக்தர்கள் முருகப்பெருமானை திருப்புகழ் பாடி வழிபாடு செய்தால் போதும். நீங்கள் கேட்ட வரங்களை முருகப்பெருமான் உடனே கொடுத்து விடுவார். அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள். முருக பெருமான் திருவுருவப்படத்திற்கு உங்களால் முடிந்த பூக்களை வாங்கி போடுங்கள்.
ஒரே ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். உங்களால் முடிந்த பிரசாதம் இரண்டு கற்கண்டுகளை முருகப்பெருமானுக்கு வைத்தால் கூட போதும், அல்லது ஒரே ஒரு வாழைப்பழம் வையுங்கள்.
பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக அமர்ந்து அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து ஏதாவது ஒரு நான்கு வரியை மனம் உருகி படித்து, உங்கள் கஷ்டங்களை முருகப்பெருமானிடம் சொல்லி முறையிடுங்கள்.
அவ்வளவு தான்.
வேறு எதுவுமே தேவையில்லை தொடர்ந்து 48 நாட்கள் உங்கள் வாயால் இந்த திருப்புகழில் இருந்து ஏதாவது ஒரு நான்கு வரியை படித்து வந்தாலே போதும். உங்கள் கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். திருப்புகழை 48 நாட்கள் நீங்கள் தொடர்ந்து படித்து வந்தால், 48 நாட்களுக்குள் முருகப்பெருமான் உங்களுக்கான அருளை வழங்கி விடுவார்.
மேலே சொன்னது போல முருகப்பெருமான் உங்களுக்கு காட்சியளித்தால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே கிடையாது. உண்மையான பக்தியோடு அன்போடு நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்தவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கும்.
கள்ளம் கபடம் இல்லாமல் தன்னுடைய பக்தர்கள் கேட்கக்கூடிய வரங்களை அந்த முருகப்பெருமான் நிச்சயம் வாரி வழங்குவார். முருகப்பெருமான் பக்தர்களில் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உண்டு. நீங்கள் முருகப்பெருமானை திட்டினால் கூட மணமகிழ்ந்து உங்களுக்கான வரங்களை அவர் கொடுப்பார் என்றால் பாருங்களேன்.
அந்த அளவுக்கு குழந்தை உள்ளம் கொண்ட முருகப்பெருமானை மேல் சொன்ன முறையில் வழிபாடு செய்து, முருகப்பெருமானின் அருள் ஆசையை அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.