வைகாசி மாதத்தில்தான் சனி பகவான் அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் மே 19ஆம் திகதி வருடந்தோறும் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கருணை காட்டி, பண மழையில் நனையப் போகின்றார்கள் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
இவர்களின் கடுமையான உழைப்புக்கு நல்ல பலனைப் பெறுவார்கள். தாய், தந்தையரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்வில் நல்ல மாற்றம் நிகழப் போகிறது.
கடகம்
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவீர்கள். ஆக்கப்பூர்வமான வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தாய், தந்தையினதும் குடும்பத்தினரினதும் ஆதரவைப் பெறுவீர்கள். கஷ்டங்கள் குறையும்.
துலாம்
தந்தையின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் பெறுவீர்கள். உயர்கல்விக்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் பாராட்டு கிடைக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றியடையும் வாய்ப்பு உள்ளது.
மகரம்
வேலைகளில் பாராட்டு கிடைக்கும். சுப பலன்கள் கிடைக்கும். ஆனால், உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
அன்பு, மரியாதை, கடின உழைப்பு என்பவற்றின் பலன் கிடைக்கும். பண பலன் கிடைக்கும். சனி பகவானின் அருள் கிடைக்கும்.