இரண்டு ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..!

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் செல்வாக்கு பெருகும். பணியில் இருப்பவர்கள் பல அனுகூலங்களை பெறுவார்கள். ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். சிலருக்கு எதிர்பாரா பண வரவு உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினமும் தொழில், வியாபாரங்களில் எதிரிகள் ஒழிவார்கள். எதிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:
கடக ராசியினர் இன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். காரியங்களில் ஈடுபட்டு வெற்றிகளை காண்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் திடீர் தொலைதூர பயணங்களை மேற்கொள்வார்கள். தொழில், வியாபாரங்கள் சிறக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். வாகனங்களை இயக்கும் பொழுது கவனம் தேவை. பிறருக்கு பிணை கையெழுத்து போடக்கூடாது. சிலருக்கு மண் அழுத்தம் ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் அலைச்சல் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். இன்று சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.

துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். பிறருக்கு கடன் கொடுக்க கூடாது. நண்பர்களுடன் சிலருக்கு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியபாரங்களில் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். சிலர் உங்களிடம் கடன் கேட்டு நச்சரிப்பார்கள். உணவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பணியிடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதையும் சாதிக்கின்ற நாளாக அமையும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். பணவரவு நிறைவானதாக இருக்கும். பெரியவர்களின் ஆசிகள் உண்டு.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் உண்டாகும். தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மன நிம்மதி இருக்கும். உறவுகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு நண்பர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.