ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன் ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு தட்டி கழிக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுயநலம் பாராமல் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத நபர் ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலவற்றை தியாகம் செய்தால் நிம்மதி கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்வரும் பிரச்சனைகளை சுலபமாக சமாளிப்பீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையாக இருப்பது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிரமங்களை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்யப் போகிறீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற பகைமையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்துடன் இருப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகள் வளரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதையும் தேடி தேடி போய் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் உதாசீனப்படுத்தாதீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமை நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சில இடங்களில் சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்வது நல்லது. பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் தன்னம்பிக்கையை தவறவிடாமல் இருப்பது நல்லது. எவரிடமும் கடன் வாங்காதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வீணாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகாமல் இருந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். குடும்பத்துடன் வெளியில் சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் கவலைகள் நீங்க கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளில் அடுத்தவர்களை ஈடுபடுத்தாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உங்களுடைய உழைப்பை கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைகள் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சவால் நிறைந்த வேலைகள் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு இருக்கக்கூடும் எனினும் இணக்கமாக செல்வது நல்லது.