கிரங்கங்களில் மங்களகரமான கிரகம் என்றால் அது சுக்கிரன் தான். இவர் பணம், வீடு, சொத்து, ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றை அள்ளி தருவார். இந்நிலையில், மே மாத இறுதியில் சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற உள்ளது. தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிரன் வரும் மே 30ம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார்.
இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகமும், அதிர்ஷ்டமும் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் –
மேஷம்:
மே மாதம் சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு யோகம் கிடைக்க உள்ளது. இவர்கள் எடுக்கும் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்க உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பண வரவு உண்டு.
கடகம்:
மே மாதம் சுக்கிரன் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அனைத்தும் சாதகமாக முடியும். உங்கள் நல்ல குணம் பலரை ஈர்க்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்:
மே மாதம் சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிறைய சாதகமான சூழ்நிலை நிலவ உள்ளது. குடும்ப வாழ்க்கையில் இனிமை பிறக்கும். ஒரு ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் வரும்.
மீனம்:
மே மாதம் சுக்கிரன் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப்போகிறது. புதிய வேலை தேடி வரும். குழந்தைப் பேறு கிடைக்கும். வீட்டில் புதிய வாகனம் வாங்குவீர்கள்.