இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்! சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது

மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கின்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தாமதமான காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்க பெறுவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் செயல்களில் கவனம் தேவைப்படும். பணியிடங்களில் பிறருடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களை இயக்கும் பொழுது எச்சரிக்கை தேவை. எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். பெண்கள் வழியில் சிலருக்கு விரயங்கள் ஏற்படலாம்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். பணம் தொடர்பான விவகாரங்களில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். ஈடுபடுகின்ற காரியங்களில் இழுப்பறி நிலை உண்டாகும். வீட்டில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் உருவாக கூடும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பல ஆதாயங்கள் ஏற்படும். சிலர் கோயில்களுக்கு சென்று வருவார்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் லாபகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி போடுவது நல்லது. தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம்.

கன்னி:
கன்னி ராசியினர் இன்றைய தினம் உங்களின் அனுபவ ஆற்றலைக் கொண்டு பலவற்றை சாதிப்பீர்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். கலைஞர்களுக்கு பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தொழில், வியாபாரங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரும். சொத்து தொடர்பான விவகாரங்களில் இழுபறி நிலை ஏற்படும். சிலர் வாங்கிய கடனை கட்ட முடியாத சூழல் ஏற்படும். பிறரின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். பொருளாதார முன்னேற்ற நிலை ஏற்படும். காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் வியாபாரங்களில் திருப்திகரமான லாபம் இருக்கும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பொதுவெளியில் உங்களின் செல்வாக்கு உயரும். தாராளமான பண வரவு இருக்கும். சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். உங்களின் திறமையால் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமைய பெறும். வெளியூர், வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். சிலருக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும்.

மீனம்:
மீன ராசிகினருக்கு இன்றைய தினம் மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும். காரியங்களில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வருமானம் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.