உங்கள் கையில் எப்போதும் பணம் இருந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ பூஜை அறையில் இதை வைங்க!

பொதுவாகவே எல்லோருக்கும் இந்த வாஸ்து சாஸ்த்திரம் மேல் அதீத நம்பிக்கை இருக்கும்.

அதிலும் இந்த பூஜை அறை விடயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் ஏனெனில் முழு வீட்டிற்கும் முக்கியமானதொன்று தான் இந்த பூஜை அறை. அது போலத்தான் உங்கள் வீட்டிற்கு பணம் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும்.

இந்தப் பணக்கஷ்டம் வராமல் இருக்க வீட்டுப் பூஜை அறையில் இதையெல்லாம் வைத்தால் பணக்கஷ்டம், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகள் சரியாகி விடும்.

பணக்கஷ்டம் தீர
பூஜை அறையில் மண் கலசம் அல்லது மண் குவளையில் கல் உப்பை நிரப்பி வைத்து இருக்க வேண்டும். அதற்கு நடுவில் சிறிய துண்டு வசம்பு வைத்து கல் உப்பால் மூடி விட வேண்டும்.

இந்தக் கலசத்தில் மேற்புறமாக 520 என்ற இலகத்தையும் கீழ் பக்கம் 741 என்ற இலக்கத்தையும் எழுதி யார் கண்ணிலும் படாதபடி சுவாமி படங்களுக்கு பின்னால் வைக்க வேண்டும்.

இந்தக் கலசத்தை மாதத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து கலசத்தில் இருக்கும் உப்பையும், வசம்பையும் மாற்றி புதிதாக போட்டு வைக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பணக்கஷ்டம் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.