மங்கலகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 10 ம் நாள் புதன்கிழமை ( 2022 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி).
ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.
இந்த நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் காலதாமதமாக நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் செய்பவர்கள் சாதகமாற்ற அமைப்பு என்பதால் வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அவசரப்படாமல் பொறுமையுடன் எதையும் கையாளுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அவ்வப்பொழுது சங்கடம் தரக்கூடிய சில விஷயங்கள் நடக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வரக்கூடிய சவால்களை திறமையாக எதிர்கொள்வீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களில் ஈடுபடும் முன்பு பலமுறை சிந்திப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி காத்திருக்கிறது. புதிய வரவு விஷயத்தில் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். ஆடம்பரப் பொருட்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் நன்மை தரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் போராட்டம் முடிவுக்கு வரும். சுய தொழிலில் உள்ளவர்கள் நீங்கள் காணக்கூடிய லாபம் எதிர்பாராதாக இருக்க போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களில் விழிப்புணர்வு தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீராத அலைச்சல் டென்ஷனை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாக இருக்கிறது. எதையும் முன்கூட்டியே திட்டமிடுதல் நன்மை தரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் மிகுந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் சுற்றியுள்ள பகைவர்களின் சூழ்ச்சிகளை சுய புத்தியுடன் முறியடிப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே பிரிவினை ஏற்படாமல் பார்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் முன்னுரிமை கொடுப்பார்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய தன்னம்பிக்கை வளர போகிறது. கணவன் மனைவிக்குள் பேச்சில் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட கால பிரச்சனை தீரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குழப்பங்கள் தீரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்பார்த்த விஷயங்கள் கைகூடி வரும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் எனவே கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பிடித்தவர்களின் பேச்சுக்கு கட்டுப்படுவீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விட்டு சென்ற உறவு ஒன்று மீண்டும் நினைக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனகசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய முடிவுகள் சாதகமான பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு பெருகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே முட்டல் மோதல் நிகழும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் சாதிக்க கூடிய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் சில இடையூறுகள் வரலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் உளைச்சல் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதுவரை இருந்து வந்த குழப்பங்களுக்கான தீர்வு காண போகிறீர்கள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரியுங்கள். சுய தொழிலில் எதிர்பாராத லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களே பகைவர்களாக மாற வாய்ப்பு உண்டு.