வரும் ஜூன் மாதம் கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது. புதன், சூரியன், சனி ஆகிய கிராகங்களின் இடம் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது.
ஜூன் மாதம் 7ம் தேதி ரிஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நடக்க உள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் 15ம் தேதி சூரியன் பெயர்ச்சி நடைபெறஉள்ளது.
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூன் 17ம் தேதி சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார். மிதுன ராசிக்காரர்களக்கு ஜூன் 24ம் தேதி புதன் பெயர்ச்சி நிகழ உள்ளது.
இந்த பெயர்ச்சியால் ராஜ வாழ்க்கை கிட்டப்போகும் அந்த 4 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார், யார்ன்னு பார்ப்போம் –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி நிகழ உள்ளது. இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது. மேலும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவும். மனைவியுடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நண்பர்களின் உறவு மேம்படும். புதிய வேலை தொடங்கினால் சுபம் கிட்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் அனைவரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களை சுற்றியுள்ள பிரச்சினைகள் விலகும். திடீரென பணவரவு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். குடும்ப நிகழ்ச்சிகளால் செலவு அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வரும் ஜூன் மாதம் சூரிய பெயர்ச்சி நடைக்க உள்ளது. இதனால் சனி வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. வியாபாரத்தில் நன்கு முன்னேற்றம் கிடைக்கும். உறவினர்களை சந்திக்க செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். குடும்பத்தில் உங்களுடன் நல்ல ஒருங்கிணைப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு வரும் ஜூன் மாதம் சூரியன் மற்றும் சனி சஞ்சரிப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க உள்ளது. பொருளாதாரம், நிதி நிலை சற்று வலுவாகவே இருக்கும். அரசுப் பணி தேர்வு எழுதுபவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.