மனிதர்கள் ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை கொடுக்கும் நிலையில், சில அறிகுறிகள் கெட்ட காலம் ஆரம்பமாகின்றதைக் குறிக்கின்றது.
சனி பகவான்
இந்து சமயத்தில் சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகின்றார். ஒரு நபர் செய்யும் நல்ல மற்றும் கெட்ட செயலுக்கு ஏற்ப அவருக்கு சுப மற்றும் அசுப பலன்களை கொடுக்கின்றார்.
சனிபகவானால் நமக்கு ஆபத்து ஏற்படப்போகின்றது என்பதை சில அறிகுறிகளை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் குறித்த அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கெட்ட காலத்திற்கான அறிகுறிகள் என்ன?
நபர் ஒருவரின் முடி திடீரென அதிகமாக கொட்டினாலோ அல்லது வெள்ளையாக மாறினாலோ இவை கெட்ட காலத்தின் அறிகுறி.
அதே போன்று வயதானவர்களைப் போன்று நபருக்கு இளம்வயதில் மூட்டுவலி ஏற்பட்டால், வரப்போகும் கெட்ட காரியத்தை குறிக்கின்றது.
காலணிகள் மற்றும் செருப்புகள் மீண்டும் மீண்டும் அருந்துபோனால் கெட்டது நடக்கப்போகின்றது என்று அர்த்தம்.
இதே போன்று காலணிகள் திருடப்பட்டாலோ, அதுவும் வீட்டிலேயே திருடப்பட்டால் அது மோசமான சம்பவம் நடப்பதற்கான அறிகுறி.
உடல்நிலை எப்பொழுதும் மந்தமாக இருந்தாலும் நீங்கள் கெட்ட நேரத்தின் பிடியில் சிக்கிக்கொள்ள போகிறீர்கள் என்றும், மேலும் முகம் எப்பொழுதும் சோர்வாகவோ அல்லது கவலையில் இருந்தாலும் கெட்ட நேரம் தொடங்குவதை காட்டுகின்றது.
மேலும் திடீர் கண்பார்வை குறைவு, முதுகில் தேவையில்லாத வலி, கெட்ட பழக்கத்தில் மூழ்கி வெளியே வரமுடியாமல் இருத்தல், வேலை மற்றும் வியாபாரத்தில் தடை, தோல்விகள் இவை அனைத்தும் கெட்ட நேரத்திற்கான அறிகுறிகள் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.