காத்திருக்கும் பேரதிஷ்டம்..! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்… இன்றைய ராசிபலன்கள்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். எவரிடமும் நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். சுய தொழிலில் ஏற்றம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிந்தனைகள் அலைபாயும் வாய்ப்பு உண்டு. மனதை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணி சுமை சற்று அதிகம் காணப்பட்டாலும் எதிர்பார்த்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாக திறமை மேம்படும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே பேச்சு வார்த்தைகளில் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நாளின் பிற்பகுதியில் அலைச்சல் இருக்க வாய்ப்புகள் அதிகம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகள் வீணாக வரக்கூடும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் ஜெயிக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப ஒற்றுமையில் மற்றவர்களின் கண் படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் உங்களுடைய சுய அறிவால் திறம்பட சிந்திப்பீர்கள். நண்பர்களின் உதவிக்கரம் தகுந்த சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் இதனால் டென்ஷன் இருக்கும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி வாகை சூடக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. முடிந்த ஒன்றை பற்றி மீண்டும் மீண்டும் பேசாதீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் கோபம் தவிர்க்கவும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயர்வதற்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நபர்களிடம் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை பற்றிய புரிதல் உங்களுக்கே உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை சிந்தனை அதிகரித்து காணப்படும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறுக்கு வழியை நாடாமல் இருப்பது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். கணவன் மனைவியிடையே நெருக்கம் உண்டாக புரிதல் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளிநாடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய பரிணாமத்தை காண போகிறீர்கள். இதுவரை இருந்து வந்தது தடைகளை உடைத்து எரிந்து சாதிக்க இருக்கிறீர்கள். நீண்டகால நண்பர்களை சந்திப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பிரயானங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.