ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். பெரியோர்களின் ஆசிகள் இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களின் ஆதரவு இருக்கும். சிலர் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பார்கள். முயற்சிகளில் இழுபறி நிலை இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். எந்த ஒரு விடயத்திலும் யோசித்து செயல்பட வேண்டும். உடல் நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தொலைதூரப் பயணங்களால் லாபம் இருக்கும். சிலர் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவார்கள். பணம் தொடர்பான விவகாரங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் இருக்கும் பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும். பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். கொடுக்கல் – வாங்கல்களில் இழுபறிநிலை உண்டாகும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மைகள் ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவார்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களில் உதவிகளால் லாபங்கள் இருக்கும். உணவு விடயங்களில் எச்சரிக்கை தேவை.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்களில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் திறமையால் சிறப்பான லாபத்தை பெறுவீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். சிலர் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் நீங்கள் கொடுத்த கடன் வட்டியுடன் உங்களிடம் வந்து சேரும். ஈடுபடும் காரியங்களில் சிறப்பான பலன் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் எதிர்காலத்திற்கான காரியங்களை திட்டமிடுவீர்கள். சரியான நேரத்தில் பணவரவு வந்து சேரும். வாங்கிய கடனை வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள். பொருளாதார நெருக்கடி சிலருக்கு ஏற்பட்டாலும், அதை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தொழில், வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். வாகனங்கள் வழியில் சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். சொத்து விவகாரங்களில் இழுபறி நிலை இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் தாமதம் ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஈடுபட்ட காரியங்களில் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொலைதூரப் பயணங்களில் பெரிய ஆதாயங்கள் இருக்காது. பொருளாதார நெருக்கடியால் சிலர் கடன் வாங்கும் நிலையும் ஏற்படலாம்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களால் சிலர் எதிர்பாராத தன வரவு பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் கிடைக்கும். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.