பேரதிர்ஷ்டத்தின் உச்சத்திலுள்ள 3 ராசியினர்! இவர்களுக்கு இனி யோக பலனாம் – இன்றைய ராசி பலன்கள்

மங்கலகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 16 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (2023 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி)

ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர் பார்த்தது நடக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சுற்றி இருப்பவர்கள் உடைய சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இனம் புரியாத குழப்பத்தில் ஆழ்ந்து கிடப்பீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன உளைச்சல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விடுபட்டு மனதை ஒருமுகப்படுத்துவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமையப் போகிறது. இதுவரை கைகூடி வராத சில விஷயங்கள் உங்களை தேடி வரும். சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய வேலையையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்துடன் இருப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தனிச்சையாக முடிவெடுக்கக்கூடிய வாய்ப்புகள் பறிக்கப்படும். குடும்பத்தில் இருக்கும் அமைதியை நிலை நாட்ட விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் குறுக்கு வழியை நாடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் துணை புரிவர்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்வது நல்லது. அவசரப்படாமல் எந்த ஒரு முடிவையும் எடுங்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வந்த நிலை காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணம் கை நிறைய புழங்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். கணவன் மனைவியிடையே புரிதல் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுய விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கருணை பிறக்கும். ஆரோக்கியம் சீராகும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துடிப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சிலர் உங்களின் நலனுக்கு கூறுவதை அலட்சியம் செய்யாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் கண் முன் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் மேலோங்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனி போர் குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நினைக்கும் விஷயத்தில் சாதித்து காட்டுவீர்கள்.

தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை, சச்சரவுகள் அவ்வப்பொழுது தோன்றி மறையும். சுய தொழிலில் லாபம் உயர கூடுதல் உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை வளரும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் பண லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதாரம் முன்னேற்றம் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியமான விஷயங்களில் வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்லுங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இதுவரை இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் தடை இல்லாமல் முடியும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நல்ல நண்பர்களை அடைவீர்கள்.