இந்த 5 ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையிலும் மன்னிப்பு கேட்க மாட்டார்களாம்

நாம் தெரியாமல் ஒரு தவறு செய்து விட்டு அதற்காக மன்னிப்பு கேட்கும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு பாதியாக குறையும் அது சூழலை சகஜ நிலைக்கு கொண்டுவருகிறது. ஆனால் சிலர் எந்த சூழ்நிலையிலும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் தவறு அவர்களுடையதாக இருந்தாலும் கூட அவர்களின் வாயில் மன்னிப்பு என்ற வார்த்தை எப்போதும் வராது.

சிலர் எளிதில் மன்னிப்பு கேட்டுவிடுவார்கள் ஆனால் சிலரோ தங்கள் தவறுக்கு வருந்தினாலும் அவர்களின் வாயில் இருந்து ‘சாரி’ என்ற வார்த்தை ஒருபோதும் வராது. ஏனெனில் மன்னிப்பு கேட்பது அவர்களை பலவீனமாக்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள் அதனால் அவர்களின் சுய கௌரவம் அவர்களை மன்னிப்பு கேட்க அனுமதிக்காது.

உண்மையில் மன்னிப்பு கேட்பது நம்முடைய மேன்மையையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாகும். இதனை சில ராசிக்காரர்கள் எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி ஈகோ உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் வேண்டுமென்றே மன்னிப்பு கேட்பதை தவிர்ப்பார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் தாங்கள் எப்போதும் தவறு செய்ய மாட்டோம் என்கிற எண்ணம் வலுவாக இருக்கும். மேலும் அவர்கள் எந்த சூழ்நிலையையும் விரைவில் கடந்து சென்று விடுவார்கள்.

எனவே மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். தங்கள் தவறையும் சரி மன்னிப்பு கேட்க வேண்டிய நபரையும் சரி மறப்பது அவர்களின் வழக்கமாக இருக்கும்.

தனுசு

இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தமாட்டார்கள். அதற்குப் பதிலாக அதை தங்கள் செயல்களால் செய்வார்கள். அவர்கள் தாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நபருக்கு பரிசு வழங்குகுவார்கள் அல்லது அவர்கள் அந்த சம்பவத்தை மறக்கும் படி வேறு ஏதேனும் செய்வார்கள்.

இந்த நபர்கள் தொடர்புகொள்வதில் மிகவும் நல்லவர்கள் எனவே அவர்கள் மன்னிப்பு கேட்காமலேயே அதனை மற்றவர்களுக்கு புரிய வைத்து விடுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மிகவும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யாத வரை அவர்களிடமிருந்து மன்னிப்பு என்பதை எதிர்பார்க்க முடியாது. இல்லையெனில், அவர்கள் பெரும்பாலும் தாங்கள் சரியானவர்கள் என்றே நினைக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் மற்றவர்களுக்காக பல நல்ல விஷயங்களைச் செய்கிறார்கள், இது மன்னிப்பு கேட்காவிட்டாலும் அவர்களை ஒரு நல்ல மனிதராக மாற்றுகிறது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதக்காரராக இருப்பதால் மன்னிப்பு கேட்பது கடினம். ஆனால் அதற்கு அர்த்தம் அவர்கள் மனம் வருந்தவில்லை என்பதல்ல, அவர்கள்அதனை உணர்வதற்கு சிறிது நேரம் தேவை.

மன்னிப்பு கேட்பது அவர்களை பலவீனமான நபராக வரையறுக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அவர்கள் மன்னிப்பு கேட்பதை தவிர்க்கின்றனர். மாறாக அவர்கள் அதை தங்கள் செயல்களால் செய்கிறார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அவர்கள் மீது உண்மையாகவே தவறு இருக்கும் போதோ அல்லது அவர்களால் தீவிர பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

அவர்கள் மன்னிப்பு கேட்காமல், அவர்கள் மீதானதவறான புரிதலை நீக்கி, தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் உறவில் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது நேர்மை.