மங்கலகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் புதன்கிழமை (2023 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி)
ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய ராசி பலன்கள்
மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஈடுபடும் காரியங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்க முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். அரசாங்க ரீதியான காரியங்களில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் இருக்கும். சுப காரிய விரயங்கள் சிலருக்கு ஏற்படும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் நன்மைகள் உண்டாகும். எடுக்கின்ற முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சிலர் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவார்கள். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கும். பயணங்களில் ஆதாயங்கள் இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல படியாக முடியும். பொருளாதார நிலை மேம்படும். நண்பர்களால் ஆதாயங்கள் இருக்கும். சிலர் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபமே இருக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சிலருக்கு பெண்கள் வழியில் வீண் விரயங்கள் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் மகான்களை சந்தித்து ஆசிகள் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருடனான கொடுக்கல் – வாங்கல்களில் எச்சரிக்கை அவசியம். விருந்து, உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய முயற்சிகளை சற்று தள்ளிப் போட வேண்டும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்பங்கள் இருக்கும். காரியங்களில் இழுபறி நிலை உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபமே இருக்கும். சிலருக்கு மருத்துவ ரீதியிலான செலவுகள் உண்டாகும். எந்த ஒரு விடயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்காது. எதிர்பார்த்த பொருள் வரவில் தாமதங்கள் ஏற்படும். பிறருடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.