சில பரிகாரங்கள் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் அளவுக்கு விசித்திரமாக இருக்கும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு நன்மை நடக்குமா என்ற சந்தேகம் கூட சில பேருக்கு, சில சமயம் வரும். அப்படி ஒரு எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
சொந்த தொழிலில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். சொந்த தொழில் நஷ்டத்திலேயே ஓடுகிறது. லாபம் எடுக்க வழியே இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
புதியதாக தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சீக்கிரமே சொந்த தொழில் தொடங்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலில் நிறைய லாபம் சம்பாதிக்க சாப்பிட வேண்டிய இரண்டு பழங்கள்:
கருப்பு பேரிச்சம்பழம், கருப்பு உலர் திராட்சை இந்த இரண்டுமே சனியின் காரகத்துவமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த பழங்களை எப்போது சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது தான். ஆனால், குறிப்பாக சனிக்கிழமை இரவு நேரத்தில் இரண்டு கருப்பு நிற பேரிச்சம்பழமும் அல்லது இரண்டு கருப்பு நிற உலர் திராட்சையோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு தொழிலில் இருக்கக்கூடிய அத்தனை தடைகளும் விலகும்.
ஒரு வாரமோ, இரண்டு வாரமோ இந்த பரிகாரத்தை செய்துவிட்டு பெரிய பலனை எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து நீங்கள் இதை செய்து வரும் போது நிச்சயமாக உங்களுக்கு நம்ப முடியாத நிறைய நல்ல மாற்றம் தொழிலிலும் வருமானத்திலும் ஏற்படும். இதோடு சேர்த்து இன்னும் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
தொழில் செய்யும் இடத்தில் டேபிளுக்கு மேல் நிறைய பேனாவை வைக்கக்கூடாது. வெள்ளை நிறத்தில் ஒரு பேனா, தங்க நிறத்தில் ஒரு பேனாவை வைத்துக் கொள்ளவும். டேபிளுக்கு மேலே ஒயர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதிகமாக இருக்க வேண்டாம்.
உதாரணத்திற்கு கம்ப்யூட்டர் ஒயர், ஸ்பீக்கர் ஒயர், சார்ஜர் போடுகின்ற ஒயர் இதெல்லாம் இருந்தால் அதை எடுத்து தூரம் போட்டு விடுங்கள். சொந்தத் தொழிலில் நிறைய லாபம் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் கருப்பு நிற செருப்பை அணிய வேண்டாம். வெள்ளை நிற செருப்பு அணியவது ரொம்ப ரொம்ப நல்லது.
தொழில் செய்யும் இடத்திலும் சரி வீட்டிலும் சரி வாசல் படிக்கு நேராக பயன்படுத்தாத செருப்புகளை அப்படியே அடுக்கி வைத்திருக்கக் கூடாது. வீட்டில் ஐந்து பேர் இருக்கிறீர்கள் என்றால் வீட்டு வாசலில் அதுவும் ஓரமாக செருப்பு ஸ்டாண்டில் மூடியபடி ஐந்து செறுப்புகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலில் முன்னேற வேண்டும் என்றால் முதலில் கண் திருஷ்டியில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும். அதற்கு உண்டான பரிகாரங்களை வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை செய்துவிட வேண்டும். மாதம் ஒருமுறை அமாவாசை அன்று செய்து விட வேண்டும்.
உங்கள் வழக்கம் போல, ஒரு எலுமிச்சம் பழத்தை சுற்றி உடைத்தாலும் பரவாயில்லை. ஆனால் திருஷ்டி கழிப்பது ரொம்ப ரொம்ப அவசியம் கண் திருஷ்டி பட்டு விட்டால் நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் முன்னேற முடியாது.