இன்றைய ராசிபலன்! வீடு தேடி வரும் அதிஷ்ட லக்ஷமி: திடீர் பணவரவால் மகிழ்ச்சியில் மூழ்கப்போகும் அந்தவொரு ராசிக்காரர்!

ஒவ்வொரு நாளும் நன்னாளே!

ஒவ்வொரு நாளையும் முன்கூட்டியே அறிந்துக் கொண்டு அதற்கேற்றால் போல் செயற்பட்டால் அந் நாள் இனிய நாளாக அமையும்.

இன்றைய நாளில் நீங்கள் எந்த விடயங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும், எந்த விடயங்களில் எச்சரிக்கைகயாக இருக்க வேண்டும், இன்று நீங்கள் முன்னேற்ற பாதையில் செல்வீர்களா என்பதை நாம் அறிந்துக் கொண்டு செயற்பட்டால் இந்நாள் சிறப்பான நாளாகவே அமையும்.

இந்நிலையில் இன்றைய கிரக நிலையை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் இருந்த நெருக்கடிகள் தீரும். குடும்பத்தினரின் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் தங்கு தடையின்றி வெற்றி பெறும். வெளியூர் பயணங்களால் பொருளாதார லாபங்கள் இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் மூலமாக பொருள் வரவு இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தினருக்காக விட்டுக் கொடுத்து செல்வீர்கள். வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து முடிப்பீர்கள். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். பூர்விக சொத்து தொடர்பான விவகாரம் நல்லபடியாக முடியும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். சிறிது தாமதத்திற்கு பிறகு பொருள் வரவு கிடைக்கும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய தினம் நீண்ட கால நண்பரை சந்திப்பீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். அரசாங்க ரீதியான காரியங்களில் அனுகூலங்கள் இருக்கும். சராசரியான தன லாபம் ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். தொழில், வியாபாரங்களை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தாராள பொருள் வரவு உண்டு.

துலாம்:
துலாம் ராசிக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனை தீரும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். மக்கள் செல்வாக்கு ஏற்படும். உறவினர்கள் வழியில் தன லாபம் உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் கவலைகள் ஏற்படும். சிலருக்கு கடன் வாங்கும் சூழல் உருவாகும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. வீணாக கோபப்படுவதை விடுத்து அமைதி கொள்ள வேண்டும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாரா வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பணத்தை சிக்கனப்படுத்தி சேமிக்க வேண்டும். வீட்டில் பெண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். வாரா கடன் வசூலாவதில் இழுப்பறி நிலை இருக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கும். முயற்சிகள் தங்கு தடையின்றி வெற்றி பெறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். மகான்களை சந்தித்து ஆசிகளை பெறுவீர்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் மனதில் படபடப்பு இருக்கும். எந்த காரியத்தையும் சரி வர செய்ய முடியாமல் போகும். பண விவகாரங்களில் புதியவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும்.