அதிர்ஷ்டம் கிட்டவுள்ள இரு ராசிக்காரர்கள் : அதிலும் இந்த ராசிக்காரர்களுக்கு..! அதிர்ஷ்டத்தின் உச்சம் இன்றைய ராசிபலன்

ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பல தடவை முயற்சிகளுக்கு பிறகு காரிய வெற்றி உண்டாகும். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பணம் தொடர்பான விவகாரங்களில் பிறரை நம்ப வேண்டாம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் நன்மையானதாக அமையும். சகோதர உறவுகளால் ஆதாயம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மதிப்பு ஏற்படும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினரின் முழுமையான ஆதரவு இருக்கும். சிலர் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியானதாக இருக்கும். புதுமையான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு செல்வார்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். இதுநாள் வரை வாராத கடன் வட்டியுடன் வசூலாகும். தொழில், வியாபாரங்களில் புதுமைகளை புகுத்தியை வெற்றி காண்பீர்கள். சிலருக்கு தாய் வழி உறவுகளால் தர்ம சங்கடம் உண்டாகும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் துணிந்து ஈடுபட்டு வெற்றிகளை காண்பீர்கள். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலர் வெளியூர், வெளிநாடு செல்லும் சூழல் உருவாகும். பெண்கள் வழியில் சிலருக்கு பொருள் வரவு உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்று எதிலும் யோசித்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களால் கடும் சவால் உண்டாகும். சிலருக்கு குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையை இருக்கும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்கு கடன் வாங்கும் சூழலும் உருவாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமான நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்ததெல்லாம் நிறைவேறும். சிலருக்கு பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிலர் தொலைதூர ஆன்மீகத் தலங்களுக்கு செல்வார்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். புதிய மனிதர்கள் மூலம் பொருள் வரவு ஏற்படும் .