மூன்று ராசியினரை தேடி வரும் அதிர்ஷ்ட யோகம்!! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..! இன்றைய ராசிபலன்

இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் வைகாசி மாதம் 22 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி).

ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல் – வாங்கலில் இருந்த இழுபறி நிலை விலகும். குடும்பத்தினரிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இன்றைய தினம் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் மந்த நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் விரோதத்திற்காளாவார்கள்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பண வரவு தாராளமாக இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் தங்களின் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். எந்த ஒரு விடயத்திலும் போராடி வெற்றி பெற வேண்டியிருக்கும். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களில் லாபங்கள் இருக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய தினம் எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். சிலர் குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவார்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் வியாபாரம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் சாமர்த்தியத்தால் அனைத்தையும் சாதிப்பீர்கள். பெண்கள் வழியில் தனவரவு ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு இருக்கும்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் காரியத்தடைகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். உணவு விடயங்களில் கவனம் தேவை.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு சுப காரிய விரயங்கள் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் திடீர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் செயல்களில் கவனம் தேவை. பணம் தொடர்பான விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். பணவரவில் இழுபறி நிலை இருந்தாலும் முழுமையாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் நேரடி, மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். சவால்களை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சகோதர வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பொருள் வரவு உருவாகும். பழைய கடன்களை கட்டி முடிப்பீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். கலைத்துறையில் இருப்பவர்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய மனிதர்களால் பொருள் வரவு இருக்கும். குழந்தைகளுக்காக சிலர் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். எதிர்காலம் குறித்த கவலைகள் இருக்கும். உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.