பணம் கையில் எப்பொழுதும் தாராளமாக புழங்க கிரகங்களும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதிலும் பணத்திற்கு அதிபதியான கிரகங்கள் தெய்வங்கள் பல இருந்தாலும் கூட, சூரிய பகவானின் பார்வை நம் மீது விழும் போது பணத்தடை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆகையால் தான் இந்த சூரிய நமஸ்காரம் வழக்கம் என்பது ஆரோக்கியத்துடன் சேர்த்து இந்த ஆன்மீக காரணங்களுக்காக கடைபிடித்து வருகிறோம். பணப்புழக்கம் அதிகரிக்க சூரிய மந்திரம் நம்முடைய பணத்தடைகள் அனைத்தையும் நீக்கக் கூடிய சக்தி வாய்ந்த கடவுளாக சூரிய கடவுள் விளக்குகிறார்.
அவரை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதையும், பணத்தடை நீங்கவும் நாம் சூரிய பகவானை நினைத்து எந்த மாதிரியான வேண்டுதலை செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு தினமும் காலையில் எழுந்தவுடன் குளிக்க முடிந்த பிறகு இதை செய்தால் நல்லது இல்லை எனில் கை கால் முகம் எல்லாம் அலம்பியபிறகு நீங்கள் சூரியனை நேரடியாக பார்க்கும் இடத்திற்கு வர வேண்டும்.
அது உங்கள் வீடு வாசலாக இருந்தாலும் சரி, மொட்டை மாடியாக இருந்தாலும் சரி ஆனால் நீங்கள் நின்று பார்க்கும் பொழுது சூரிய பகவானை நேரடியாக பார்க்க வேண்டும். சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசையில் நீங்களும் நின்று சூரிய பகவானை நேருக்கு நேராக பார்த்து பத்து வரை எண்ண வேண்டும்.
அதன் பிறகு கண்களை மூடி சூரிய பகவானே நம் உடலுக்குள் செல்வது போல கற்பனை செய்து கொள்ள வேண்டும். இப்படி தியானம் செய்து சூரியனுடைய பிம்பத்தை நம் கண்கள் வழியாக உடலுக்குள் செல்வது போல எண்ணும் போது நம் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
இத்துடன் கீழ் வரும் இந்த மந்திரத்தையும் சொல்ல வேண்டும். ஓம் சூரிய சக்தி வர வர ஸ்வாகா என்ற இந்த மந்திரத்தை 27 முறை சூரிய பகவானின் முன் நம் இரு கைகளை கூப்பி வணங்கி சொல்ல வேண்டும்.
இப்படி சொல்லும் போது நமக்கு இருக்கும் பணத் தடைகள் அனைத்தும் நீங்கி பண வரவை தாராளமாக மாற்றக் கூடிய ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு. மந்திரங்களை நீங்கள் எந்த அளவிற்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு அதனுடைய ஆற்றல் உங்கள் உடம்பில் கூடிக் கொண்டே செல்லும்.
இந்த நமஸ்காரமும் மந்திரமும் தினமும் நீங்கள் சொல்லும் போது உங்களுடைய எண்ணமும் செயலும் மேன்மை அடைந்து நீங்கள் பணம் சேர்க்க சம்பாதிக்க என எடுக்கும் அனைத்து முயற்சியும் தடையில்லாமல் வெற்றியை கொடுத்து பண வரவை தாராளமாக கொடுக்கும் என்பது தான் இந்த பரிகாரத்தின் பலனே.
பண வரவிற்கான இந்த சூரிய வழிபாட்டு மந்திரம் உங்களின் பணப் பிரச்சனைகளையும் போக்கும் என நம்பினால், நீங்களும் இந்த குறையை பின்பற்றி உங்களுடைய பணத்தடைகள் அனைத்தையும் நீக்கி செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழலாம்.