காத்திருக்கும் பேரதிஷ்டம்..! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்… இன்றைய ராசிபலன்கள்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும். வாரா கடன் வசூலாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகளில் தடங்கல் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களால் சவால் அதிகரிக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் இழுபறி நிலை இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்படும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். அந்நிய நபர்கள் உங்களுக்கு உதவுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் நடைபெறும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் வெற்றிகரமானதாக இருக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் பெரியவர்களின் ஆதரவு இருக்கும். பிரிந்து சென்ற உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். திருமணம் போன்ற சுப காரியம் முயற்சி வெற்றி பெறும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வெளியூர் பயணிகளில் பெரிய ஆதாயம் இருக்காது. தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும், பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றவீர்கள். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவார்கள். புதிய முயற்சிகளை ஒத்தி போட வேண்டும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்பங்கள் ஏற்படும். ஈடுபடுகின்ற காரியங்களில் தடுமாற்றங்கள் இருக்கும். குடும்பத்தினரிடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தடங்கல் ஏற்படும். பணவரவில் இழுபறி நிலை இருக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பிறர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் முன்னேற்றமான நாளாக இருக்கும். சகோதர உறவுகளால் நன்மைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளித்து நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிகள் இருக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயங்கள் இருக்கும்.