ராகு பெயர்ச்சியால் ஜாக்பாட்!… ஒரே இரவில் 4 ராசிகளுக்கு அரங்கேறும் அதிர்ஷ்டம்! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்…

ஜோதிடத்தில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது ராகு கிரகம் தான். இந்த கிரகம் வரும் அக்டோபர் வரை மேஷ ராசியில் தங்கியுள்ள நிலையில், எந்தெந்த ராசிகளுக்கு நன்மையை செய்வார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ராகு என்றாலே பயம் தான் வரும். ஜோதிடத்தில் கணிக்கு முடியாத கிரகமாக பார்க்கப்படும் ராகு கிரகத்தினை புரிந்து கொள்வது மிகவும் கடினமே.

பூமியின் சுற்றுப்பாதையும், சந்திரனின் சுற்றுப்பாதையும் வெட்டும் இடத்தில் அடையாளம் காணப்படும் கிரகம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் ராகுவின் நிலை மிகவும் மோசமாக இருந்தால் பல பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

இதுவே ஜாதகத்தில் ராகு சரியான இடத்தில் இருந்தால் எதிர்பாராத விதத்தில் பல மடங்கு நல்ல பலன்களைத் தருவார். ஒரே இரவில் ஒருவரிடம் அதிர்ஷ்டத்தினை மாற்றும் கிரகம் இதுவே…

தற்போது ராகு பெயர்ச்சியாகி அக்டோபர் 30ம் தேதி வரை அங்கே இருக்குமு் நிலையில், பின்பு வியாழனின் ராசியான மீனத்தில் நுழைகின்றார். இத்தருணத்தில் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

கடகம்

கடக ராசியினைப் பொறுத்தவரையில் அக்டோபர் வரை ராகு பத்தாம் வீட்டில் இருக்கின்றார். இதனால் நிதி ஆதாய வாய்ப்புகள் ஏற்படுவதுடன், வேலையில் மாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும் இந்த வேளையில், ராகுவின் ஆதரவைப் பெற நாய்க்கு பால் மற்றும் ரொட்டியை வழங்கவும்.

சிம்மம்

சிம்ம ராசியினைப் பொறுத்தவரையிலும் ராகு பத்தாவது இடத்திலே இருக்கின்றார். இதனால் செல்வம் பெருகுவதுடன், அனைத்து வேலையினையும் வெற்றிகரமாக முடிப்பதுடன், பயணங்களுக்கும், குடும்ப பணிகளுக்கும் பணம் செலவழிக்க முடியுமாம். இத்தருணத்தில் தோஷம் ஏற்படாமல் இருப்பதற்கு சிவலிங்கத்திற்கு தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டுமாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியைப் பொறுத்தவரையில் ராகு ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன், எளிதில் வேலை மற்றும் தொழில் தொடங்கும் நிலை ஏற்படும். பணி உயர்வு, பண அதிகரிப்பும் இருக்கும் இத்தருணத்தில் சுகாதார பராமரிப்பு அவசியம். விருச்சிக ராசியினர் ராகுவின் தீய பலன்களைத் தவிர்ப்பதற்கு விநாயகரை வழிபடவும்.

கும்பம்

கும்பம் ராசியினருக்கு ராகு மூன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கும் இந்த சூழ்நிலையில், அனைத்தும் சாதகமான பலன்களை பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்களது நம்பிக்கை அதிகரிப்பதுடன் வியாரத்திலும் லாபம் ஏற்படும். ராகுவின் அனுகூலத்திற்காக கோவிலில் தானம் செய்யலாம்.