ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவார்கள். உறவினர்கள் வழியில் தனவரவு இருக்கும். பணியிடங்களில் உங்களுக்கான மதிப்பு பெருகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் தைரியம் கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வருவார்கள். தொழில், வியாபாரங்களில் சிறப்பான நிலை காணப்படும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். எதிரிகளை வெல்வீர்கள். சிலருக்கு பண நெருக்கடி ஏற்படும். தொலைதூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு உறவினர்கள் வழியில் செலவுகள் உண்டாகும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் புகழ், கௌரவம் கூடும். உங்களுக்கு வரவேண்டிய பணம் சரியாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்கின்ற வாய்ப்பு அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் கைராசி மிகுந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் தைரியம் அதிகரிக்கும். சவாலான காரியங்களை செய்து பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலர் ஞாபக மறதியால் பொருட்களை தவற விடுவார்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சராசரியான நாளாகவே இருக்கும். உடலிலும், மனதிலும் சோர்வு ஏற்படும். ஒரு சிலருக்கு குழந்தைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை அடைவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகம் மிகுந்ததாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள், தம்பதிகளிடையே இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும்.
தனுசு:
தனுசு ராசிக்கு இன்றைய தினம் இன்பமானதாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கடனை வட்டியுடன் திரும்ப செலுத்தி நிம்மதி பெறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு பணவரவுகளில் தாமத நிலை இருக்கும். பணியிடங்களில் உங்களின் ஆலோசனைகளை உயரதிகாரிகள் ஏற்பார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சிறிது அலைச்சலுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். பணிச்சுமையால் சிலருக்கு சோர்வு ஏற்படும். பிறருடன் தேவையற்ற விவாதங்கள் தவிர்க்க வேண்டும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் நிதானம் அவசியம். பிறர் விடயங்களில் தலையிட வேண்டாம். சிலர் பண தட்டுப்பாட்டால் கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிலருக்கு நண்பர்களுடன் பகைமை ஏற்படலாம்.