இன்றையதினம் ஜூன் மாதம் 8 ம் திகதி வியாழக்கிழமை. சோபகிருது வருடம் வைகாசி மாதம் 25 ஆம் நாள்.
சந்திர பகவானுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம். இன்றைய நாள் மகர ராசி, தேய்பிறையில் வரும் பஞ்சமி திதி.
இன்றைய நாள், பலன்களின் அடிப்படையில் சில ராசியினருக்கு நன்மை தரக்கூடிய நாளாகவும், சில ராசியினருக்கு கொஞ்சம் சங்கடத்தை தருகின்ற நாளாகவும் அமைந்துள்ளது.
ஜோதிடத்தின் அடிப்படையில் இருக்கும் நவகிரகங்கள் நாளாந்தம் பயணித்துக்கொண்டே இருக்கின்றன.
இதனால், ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் கிடைக்கிறது.
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய ராசி பலன்கள்
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். சிலர் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவுகள் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டம் என்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் உருவாகும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ ரீதியிலான செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்தது நிறைவேறும். தாராள பொருள் வரவு இருக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் அமையும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களால் பணவரவு இருக்கும். சிலருக்கு வீட்டில் சுப விரயங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் தடைகள் நீங்கி, காரிய வெற்றி உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு குடும்பத்தினருடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தொலைதூர பயணங்களால் ஆதாயம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பெறுவார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பணம் தொடர்பான விவகாரங்களில் பிறரை நம்ப வேண்டாம். புதிய முயற்சிகள் காலதாமதமாகும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள பொருள் வரவு இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வருமானம் பெருகும். தொழில், வியாபாரங்களில் இருந்த மறைமுக எதிரிகள் ஒழிவார்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களால் தர்ம சங்கட நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் களில் இழுபறி நிலை இருக்கும். முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக முடியும். வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு ஏற்படும். சிலர் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விவாதங்களை தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகளை சற்று ஓத்தி போடுவது நல்லது. சகோதர உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள். பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நீங்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை வழி உறவுகள் மூலம் நன்மை ஏற்படும். விருந்து, உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள். மனதில் நிம்மதி இருக்கும்.