எதிர்பாராத ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு தான்..! காத்திருக்கும் பண அதிர்ஷ்டம்; யாருக்கெல்லாம் மங்கல யோகம் தெரியுமா..! – இன்றைய ராசி பலன்கள்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நண்பர்கள் உதவி கேட்டு உங்களிடம் வருவார்கள். தொழில், வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய சொத்துக்களை வாங்கும் அமைப்பு உருவாகும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிலர் குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு செல்வீர்கள். தொழில், வியாபாரங்களில் இருந்த தடை விலகும். பண வரவு தாராளமாக இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சனைகள் சமூகமாக தீரும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்தி வரும். பெண்கள் வழியில் தனலாபம் இருக்கும். சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நீங்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். திருமண வயது பெண்களுக்கு வரன் அமைவதில் தாமதம் ஏற்படும். உறவினர்களால் தர்ம சங்கடமான நிலை உண்டாகும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மறைமுக எதிரிகள் விலகுவார்கள். புதிய மனிதர்களின் நட்பால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். அறிமுகம் இல்லாத மனிதர்களால் ஆதாயம் இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற சொத்து சேர்க்கை ஏற்படும். வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். பணம் தொடர்பான விவகாரங்களில் புதியவர்களை நம்ப கூடாது.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்று எண்ணியதெல்லாம் ஈடேறும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். சிலர் திடீர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் தீரும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகளில் சற்று இழுபறி நிலை இருக்கும். எதிர்பார்த்த பணம் முழுமையாக வந்து சேரும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. பெண்களால் நன்மைகள் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல் வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பழைய நிலுவை கடன் தொகை முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சிலர் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவார்கள். பணவரவு இருந்தாலும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.