ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் அறிவுரையை மற்றவர்கள் ஏற்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். உறவினர்கள் உங்களின் உதவி கேட்டு வருவார்கள். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருந்தாலும், சேமிப்பில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும். பணம் தொடர்பான விவகாரங்களில் பிறர் ஏமாற்றக்கூடும். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். பெண்கள் மூலமாக வீண் விரயங்கள் சிலருக்கு ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மனோதிடம் அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியினர் இன்றைய தினம் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். தொழில் வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சமூகத் தீர்வு கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் நாசியினருக்கு இன்றைய தினம் நல்ல செய்தி வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். சொத்து தொடர்பான விவகாரங்களில் நல்ல முடிவு உண்டாகும். பொருள் வரவு தாராளமாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். ஆன்மீக தலங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய காரிய முயற்சிகளை ஒத்தி போட வேண்டும். பெண்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் எதிர்காலத்திற்கான திட்டமிடல்களை மேற்கொள்வீர்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சிலர் புதிய சொத்துக்களை வாங்குபவர்கள். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் மன சங்கடங்கள் தீரும். புதிய முயற்சியில் சிறப்பான வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபம் இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் கவலைகள் ஏற்படும். எதிர்பாராத பொருளாதார நெருக்கடி ஏற்படும். பழைய கடன்களை அடைக்க திணறுவீர்கள். நெருங்கிய உறவினர்கள் உதவுவார்கள். உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். சில குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.