சனி பகவானின் அதிஷ்ட பார்வையால் பல இலட்சங்களுக்கு அதிபதியாகும் ராசிக்காரர் இவர்கள் தான்

அன்றாட வேலையில் ஈடுபடும் மக்கள் ஒவ்வொரு நாளும் தனக்கு எவ்வாறான நாளாக இருக்கும் என்பதை பற்றி அதிகமாகவே சிந்திப்பதுண்டு.

எந்த விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அறிந்துக் கொண்டு அதன்படி முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி என பல பெயர்ச்சிகளை நாம் சந்தித்து சுப, அசுப பலன்களையும் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

தற்போது குருப்பெயர்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது ஆரம்பித்திருக்கிறது சனி வக்ர பெயர்ச்சி. இந்த சனி பகவானில் பார்வையில் படுபவர்களுக்கு பூர்வபுண்ணிய கணக்குகளின் படி தான் பலன்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் தற்போது அடுத்ததாக சனி வக்ர பெயர்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார்.

இவர் ஜூன் 17ஆம் திகதி இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியில் வக்ரமாகவுள்ளார். பிறகு நவம்பர் 4ஆம் திகதி காலை 8.26 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைந்து விடுவார்.

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஜுன் 17-ந் தேதி முதல் வக்ர கதியில் பிற்போக்கு நிலையில் பயணம் மேற்கொள்ள போகிறார். கிரகத்தின் பிற்போக்கு இயக்கத்தின் காரணமாக நம் வாழ்வில் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதே இதன் பொருள்.

நீதிமான் சனி பகவான் கடந்த ஜனவரி மாதம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசிக்குள் நுழைந்த இவர் சில நாட்களிலேயே அஸ்தமனமாகி மார்ச் மாதத்தில் மீண்டும் அடுத்த நட்சத்திரத்தில் சனி உதயமானார். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் இந்த ஜூன் மாதத்தில் வக்ர மாகவுள்ளார்.

அதாவது சனி பகவான் 2023 ஜூன் 17-ஆம் தேதி இரவு 10:48 மணிக்கு கும்ப ராசியில் பின்னோக்கி பயணிக்க உள்ளார். சனிபகவான் இந்த நிலையிலேயே நவம்பர் 30 வரை காணப்பட்டு பின்பு டிசம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார்.

கிரகங்கள் வக்கிர நிலையில் இருக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனவே சனி வக்ர பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு நிதி மேன்மை, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளார். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம் :
உங்களின் ராசிக்கு 9-ஆம் வீட்டில் சனி வக்ரப் பெயர்ச்சி செய்ய உள்ளார். இதனால் சனி உங்களுக்கு நல்ல பலன்களை வழங்குவார். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களின் ஆசை இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் சற்றும் மோசமாக காணப்படும்.

பிரச்சனையில் இருந்த பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைப்பதோடு பதவி உயர்வும் கிடைக்கும்.

சிம்மம் :
சனி உங்கள் ராசியின் 7 வது வீட்டில் வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் நடைபெறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடந்து முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமான நேரத்தை கழிப்பீர்கள்.

இவ்வளவு நாள் நீங்கள் செய்த கடின உழைப்புக்கான முழு பலனும் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் கடன் கொடுத்து விடாதீர்கள். யாருக்காகவும் ஜாமினில் கையெழுத்து போட வேண்டும்.

துலாம் :
சனி உங்கள் ராசியின் 5 ஆவது அடைய உள்ளார். சனியன் இந்த நிலை உங்களுக்கு நிதி சிக்கல்களை சமாளிக்க உதவும். ஆனால் நீங்கள் வேலையை இழப்பது போன்ற பின்னடைவை நீங்கள் சந்திக்க நேரிடும். இருப்பினும் நீங்கள் திடீரென்று சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள்.

பொருளாதார ரீதியாக இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. காதல் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தனுசு :
சனி உங்கள் ராசியின் 3 ஆவது வீட்டில் வக்கிரப் பயிற்சி அடைய உள்ளார். இதனால் ஜூன் மாதத்திற்கு பின் நீங்கள் எக்கச்சக்கமான நன்மைகளையும், சந்தோஷங்களையும் பெறுவேர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் விரைவில் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் தேர்வில் வெற்றியை பெறுவார்கள். கடின உழைப்பால் உயரங்களைத் தொடும் இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்தினால் முன்னேற்ற வாய்ப்புகளும் உண்டாகும்.