மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 3 ராசியினர் – யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

இன்று ஜூன் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சோபகிருது வருடம் வைகாசி மாதம் 28 ஆம் நாள்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை பெற்றுத் தரும். புனித யாத்திரை ஒன்றை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு திருப்தி உணர்வை அளிக்கும்.

நீங்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிக்கு அங்கீகாரமும் பாரட்டும் கிடைக்கும்.

நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் பணத்தை சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள்.

இன்று ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் காணப்படாது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். வெற்றி காண கடினமாக உழைக்க வேண்டும். சிறந்த தகவல் தொடர்பாடல் மூலம் நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.

பணியிடச் சூழல் நாளை சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சின் மூலம் சிறந்த வளர்ச்சி பெறுவீர்கள். இது உங்களுக்கு வழிகாட்ட உதவும்.

இன்று கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் காதலுக்கு உகந்த நாள் அல்ல.

வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். வருவதைக் கொண்டு நிர்வகிக்க வேண்டும்.

மிதுனம்
இன்று சாதாரணமான நாள். நீங்கள் பெரியவர்களைக் கூட மகிழ்விக்கும் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள்.

இறை மந்திரங்கள் சொல்வது இசை கேட்பது மன ஆறுதலை அளிக்கும். பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது.

உங்களுக்கு புதிய பணிகள் கொடுக்கப்படும். அது சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.

உங்கள் தந்தையுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்ப அங்கத்தினர்களின் நல்லாதரவு பெறுவீர்கள்.

நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் பொதுவாக சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்

கடகம்
இன்று மிகவும் சிறப்பான நாளாக காணப்படாது. உங்கள் செயல்களை சிறப்பாக திட்டமிட வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எதற்கும் உணர்ச்சி வசப்படாதீர்கள்.

பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. நீங்கள் அதிக பணிகளை சுமக்க நேரும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக காணப்படாது. அதிக செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் கவனம் தேவை.

சிம்மம்
உங்கள் செயல்களை சீராக மேற்கொள்வதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நாளை முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. உங்கள் பணிகள் பாராட்டைப் பெறும். உங்கள் பணிகளை நீங்கள் அனுசரித்து கவனமாக மேற்கொள்வீர்கள்.

நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் பணத்தை சேமிக்க இயலும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் நம்பிக்கை எண்ணம் காணப்படும். இது உங்கள் ஆரோக்கியத்தில் பிரதி பலிக்கும்.

கன்னி
வெற்றி பெறுவதற்கான தைரியமும் உறுதியும் உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பணிகளை திறமையுடன் ஆற்றுவீர்கள். உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.

பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு நீங்கள் ஊக்கத் தொகை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் இருக்காது.

துலாம்
இன்று சராசரிக்கும் அதிகமான பலன்களை அளிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை நன்கு பயன்படுத்துவீர்கள். உங்கள் தரத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் நீங்கள் முயற்சி எடுக்கலாம்.

பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. நீங்கள் உங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பீர்கள்.

நீங்கள் சம்பாதித்த பணத்தை ஆன்மீகக் காரியங்களுக்காக பயன்படுத்துவீர்கள். இதன் மூலம் மனதிருப்தியை அடைவீர்கள்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் இருக்காது.

விருச்சிகம்
இன்று மந்தமான நாளாக இருக்கும். உங்கள் உணர்ச்சி மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை கவனமாக முடிக்க நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க நேரும்.

பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. நீங்கள் தேவையற்ற செலவுகளை செய்வீர்கள். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

தனுசு
எதிர்பாராத வகையில் நன்மை கிடைப்பதற்கான வாய்ப்புள்ள நாள். நாளைய சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியில் உங்கள் சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். நாள் முழுவதும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மகரம்
இன்று உங்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். அனுசரித்துப் போவது நல்லது. எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிதி நிலைமையில் மிதமான வளர்ச்சி காணப்படும். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.

ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

கும்பம்
இன்று சராசரிக்கும் அதிகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் மன திருப்தி பெற இயலும்.

உங்களின் பணிகள் எந்த தடையும் இல்லாமல் நடக்க இன்று நீங்கள் பொறுமையை இழக்காமல் புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டியது அவசியம்.

பங்கு வர்த்தகம் போன்ற புதிய முதலீடுகள் திருப்தி அளிக்கும். இவற்றின் மூலம் திருப்தியான பண வரவு காணப்படும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

மீனம்
இன்று சற்று மந்தமான நாள். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும். பலன்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி காணப்படாது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் காணப்படும். அதிகப் பணிகள் மற்றும் கவனக் குறைவே இதற்குக் காரணம்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.

இன்று பண விரயம் காணப்படும். தேவையற்ற செலவுகள் செய்ய நேரும்.இது உங்களுக்கு கவலை அளிக்கும்.