காத்திருக்கும் பேரதிஷ்டம்..! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்… இன்றைய ராசிபலன்கள்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். மதியத்திற்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரங்களில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்கள் உதவுவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரங்களில் உங்கள் திறமையால் லாபங்களை பெறுவீர்கள். அறிமுகம் இல்லா மனிதர்களால் ஆதாயம் இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சினைகள் சமூகமாக தீரும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும். பெரியவர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் தாய் வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக திரும்பலாம். சிலருக்கு தந்தை வழி உறவுகளால் பிரச்சனைகள் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். பழைய கடன்களை வட்டியுடன் அடைத்து முடிப்பீர்கள்.

துலாம்:
துலாம் ராசிக்கு இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். தம்பதிகளிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளை மதியத்திற்கு மேல் செய்யலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நல்லபடியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு இருக்கும். பூர்வீக சொத்து தொடர்பான விவகாரங்களில் நல்ல முடிவு ஏற்படும்.

தனுசு:
தனுசு ராசிக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உங்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் தீரும். சகோதர உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சிலர் தொலைதூர ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பொருள் வரவு தாராளமாக இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த காரியங்களில் தாமதம் ஏற்படும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் சராசரியான நிலையே இருக்கும்.

மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் புரிய முயற்சிகளை ஒத்தி வைக்க வேண்டும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் புதிய வேலைவாய்ப்பு கிடைக்க பெறுவார்கள். வராமல் இருந்த பணத்தொகை முழுமையாக வந்து சேரும்.