ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடையில்லாத வெற்றிகள் கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதை உணர்வீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே புரிதல் தேவை. தேவையில்லாத பகைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிரிகளை துவம்சம் செய்து அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மன அமைதியைத் தேடிக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் குழம்பி காணப்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற சிந்தனைகளை விடுத்து மனதை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். தொழிலில் ஏற்றம் காணக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முயற்சி செய்ததற்கான பலன்களை பெறக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சச்சரவுகள் தொலையும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள், அவர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. எதிர்மறையான விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தேடியும் கிடைக்காத ஒரு பொருள் உங்களை தானாக வந்தடையும். ஆரோக்கியம் வலுபெறும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்தம் புதிய பாதைகள் பிறக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உற்றார், உறவினர்களின் மூலம் நன்மைகளை பெறுவீர்கள். சுயமாக எதையும் சிந்தித்து முடிவெடுங்கள். தேவையில்லாத பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டாம், ஒதுங்கி இருங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த முட்டல், மோதல்கள் மறையும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. இதுவரை முன் நின்று எதிர்த்து வந்தவர்கள் உங்களை முதுகில் குத்த பார்ப்பார்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் மகிழ்ச்சி நிறைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்களால் நல்ல செய்திகளை பெறுவீர்கள். குறுக்கு வழியை நாடாதீர்கள் வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்வீர்கள். தேவையான இடங்களில் இருந்து தேவையான பணம் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஆகலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறாக நடக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுப காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். உழைப்போர் கையில் அதிகம் பணம் புழங்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இனம் புரியாத பயம் தென்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற குழப்பங்களை தவிருங்கள். உழைப்பால் உயரக்கூடிய நாளாக இருக்கிறது. இழந்த தன்னம்பிக்கை மீண்டும் துளிர் விடும். எவரையும் அனாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். சுயநலம் தவிருங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் அதிகரிக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளை எளிதாக முறியடிப்பீர்கள். உற்ற நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இழந்துவிட்ட நேரம் மீண்டும் வராது என்பதை உணர்வீர்கள். செய்நன்றி மறக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை.