நமது அன்றாட வாழ்வில் சிறுசிறு இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும். அவ்வாறு ஏற்படும் சூழ்நிலையினை தனக்கு சாதமாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆயுள் நீடிக்க, செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்?
- குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், கோவிலில் முழு மஞ்சள் பரங்கிக்காயை (மஞ்சள் பூசணி) தானம் அளிக்க பிரச்சனை தீரும்.
- தினமும் பறவைகளுக்கு உணவு அளித்தால் வீண் விரயம் உண்டாகாது.
- மனதில் பய உணர்வு இருந்து கொண்டே இருந்தால் வலது கையில் இரும்பு வளையம் அணிந்தால் பயம் தீரும்.
- வாகனங்களில் பயணம் செய்யும் போது கைப்பையில் சிறிதளவு காகிதப்பூ இருந்தால் விபத்து ஏற்படாது.
- காலை எழுந்ததும் தங்க நாணயம், தங்க ஆபரணம், ரூபாய் நோட்டு போன்றவற்றை பார்த்தால் செல்வம் பெருகும்.
- இடது கை கீழே இருக்கும் படுத்தால் ஆயுள் அதிகரிக்கும்.
- வீட்டை சுற்றி நீரோட்டம் இருந்தாலோ அல்லது செயற்கையாக அமைத்துக் கொண்டாலோ கையில் எப்போதும் பணம் புழங்கும்.
- காரணமின்றி இரவில் குழந்தைகள் அழுதால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்கவும். பின்பு குழந்தை நன்றாக உறங்கும்.
- சமையல் அறையும், படுக்கை அறையும் ஒன்றுக்கொன்று அருகில் இருந்தால் தம்பதியர் ஒற்றுமை நிலைக்கும்.
- வீண் குழப்பம், மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் இரவில் தலைக்கு அருகில் செம்பில் தண்ணீர் வைத்து படுப்பது நலம் தரும். மறுநாள் அதை கால்மிதி படாமல் மரத்தில் ஊற்ற வேண்டும்.