புதன் தன்னுடைய சொந்த ராசிக்கு இந்த மாதத்தின் இறுதியில் மாற்றமடைவதால் 3 ராசியினர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை பெற உள்ளனர்.
அறிவு, கல்வி, தொழில், பேச்சு போன்றவற்றின் காரணியாக இருக்கும் புதன் கிரகம் ஒரு ஆண்டுக்கு பின்பு தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் வரும் 24ம் தேதியில் நுழைகின்றார்.
இந்த பெயர்ச்சியின் போது திடீர் செல்வத்தினை பெற்று திக்குமுக்காட போகும் ராசியினை காணலாம்.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதியான புதன், இந்த பெயர்ச்சியின் போது பத்தாவது வீட்டிற்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சியினால், நல்ல லாபமும் எதிர்பாராத வெற்றியும் கிடைக்கும்… நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் பெரும் வெற்றியைத் தான் கொடுக்குமாம்.
மேஷம்:
மேஷ ராசியில் மூன்றாவது வீட்டிற்கு புதன் செல்வதால், குறித்த ராசிக்காரர்களக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், எதிரிகளை வீழ்த்தும் காலமாக இது இருக்கும். தைரியம் வீரம் இந்த நேரத்தில் அதிகமாகவே இருக்கும்… நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நிச்சயம் சாதகமான தீர்ப்பே வரும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு ஐந்தாவது வீட்டிற்கு புதன் செல்வதால் அதிர்ஷ்டத்தை அளிப்பதுடன், ஆராய்ச்சி துறையில் நினைத்த வெற்றியினை காண்பார்கள். மகிழ்ச்சி பொங்கும் இந்த நேரத்தில் பண வரவு மற்றும், குழந்தைகள் விடயத்தில் நல்ல செய்தியும் வீடு தேடி வரும்.