மூன்று ராசியினரை தேடி வரும் அதிர்ஷ்ட யோகம்!! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..! இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இன்றைய பலன்கள்

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும். தொலைதூரப் பிரயாணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுங்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே தெளிவு தேவை. எதிர்பாராத செலவுகள் வரலாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியான சூழ்நிலை நிலவக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரயாணங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். முயற்சி திருவினையாக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்வரும் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் படியான செய்திகள் கிடைக்கும். சிலருக்கு மறதியால் பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்பொழுது தோன்றி மறையும். சுப காரிய பேச்சுகளில் வெற்றி கிடைக்கும். வேலையில் கூடுதல் அக்கறை தேவை.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆக்கத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. புதிய விஷயங்களில் ஆர்வம் உடன் ஈடுபடுவீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு குறையும். கொடுத்த கடன் வசூல் ஆகும். ஆரோக்கியம் சீராகும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் உறுதுணையாக செயல்படுவார்கள். வரவுக்கு உரிய செலவுகளும் வரும். வாகன பராமரிப்பு தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெற்றி கிடைக்க பொறுமை தேவை.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வேலையில் முனைப்புடன் செயல்படுவீர்கள். குறித்த நேரத்திற்கு உள்ளாகவே எதையும் சாதிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் பேச்சில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் சுகவீனம் ஏற்படலாம் கவனம் வேண்டும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கைகூடி வரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தியை தரும். மன பயம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆசைப்பட்ட பொருள் ஒன்று உங்களைத் தேடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பரிவுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சமூக அக்கறை அதிகரித்து காணப்படும். உங்களுடைய திறமைகளுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். சில விஷயங்களில் ஆரவாரத்துடன் செயல்படுவீர்கள். வேகத்தை காட்டிலும் விவேகத்தை கடைபிடிப்பது வெற்றியை தேடி தரும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சினத்தை தவிர்ப்பது நல்லது. பொறுமை கடலினும் பெரிது என்பதை உணர்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். தகாத நண்பர்களின் சகவாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நேர்மை தான் உங்களுக்கு வெற்றியை தரும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் நீங்கி வெற்றியடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். பகைவர்களும் நண்பர்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்கள் எளிதாக ஈர்க்கப்படுவார்கள்.