இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் வைகாசி மாதம் 32 ஆம் நாள் வியாழக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி).
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நபர்களை நீங்கள் சந்திக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே புது புரிதல் உண்டாகும். பங்குதாரர்களுடன் சிறு சிறு வாய் தகராறுகளை தவிர்க்கவும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும் வகையில் நல்ல அமைப்பாக இருக்கப் போகிறது. பொது காரியங்களில் கூடுதல் முனைப்புடன் செயல்படுவீர்கள். போக்குவரத்து விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்க போகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். உங்களுடைய கனவுகளுக்கான முதல் படியை காண இருக்கிறீர்கள். மனதை அலைபாய விடாதீர்கள் கட்டுப்படுத்துங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பக்கத்தில் சிறந்த நாளாக இருக்கப் போகிறது. நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பீர்கள். புரியாத பல விஷயங்கள் புரியவரும். மற்றவர்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் கூடுதல் உழைப்பு கொடுக்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனையில் புதிய விஷயங்கள் உதிக்க கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் மங்கள பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். மனதிற்கு பிடித்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு பலரும் உறுதுணையாக இருப்பார்கள். எடுத்த முடிவில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். பயணங்களில் கவனம் வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதையும் பேசியே சாதித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் கூடும். நண்பர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். பண வரவு பெருகும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்களில் ஏமாற்றம் காண வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டைகள் தோன்றி மறையும். வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிர்மறையான விமர்சனங்களை உதறித் தள்ளுங்கள். எவரையும் நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சில இடம் எதிர்பாராத மாற்றத்தை கண்டு மனம் கலங்கலாம். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நாள் நீங்கள் மீள முடியாத சில நினைவுகளில் இருந்து மீண்டு வருவீர்கள். புதிய விஷயங்களை உற்று நோக்குங்கள். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரித்து காணப்படும். பெரிய தொகையை கையாளும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகளை கூட அலட்சியம் செய்யாதீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய முக்கியமான நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. நெருங்கியவர்களிடமிருந்து நல்ல செய்திகளை பெறலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் என்று நடக்கும். தேவையில்லாத கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை உருவாகும். சிலருக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.