வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான் – அடுத்தடுத்த சிக்கலில் சிக்கி தவிக்கும் முக்கியமான 4 ராசிக்காரர்கள்..!

நவக்கிரகங்களின் பெயர்ச்சிகளில் பெரிய மாற்றங்களை சனிப்பெயர்ச்சி தான் செய்கிறது.

சனி பகவான் ஒவ்வொரு ராசியை நோக்கி பெயர்ச்சியாகும் பொழுது, அந்த ராசிக்காரர்களினுடைய பலன்களும் மாற்றம் பெறுகிறது.

அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் கும்ப ராசியில் இருந்து சனி பகவான் பெயர்ச்சியானார்.

கடக ராசி

தற்போது, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி நகர்ந்து 4 மாதங்களுக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

இதனால், 4 மாதங்களுக்கு ராகு மற்றும் கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. வருகின்ற ஒக்டோபர் 30 ஆம் திகதி ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளது.

வருகின்ற ஜூன் 17 முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைகிறார், தற்போது அஷ்டம சனி கடக ராசிக்காரர்களுக்கு நடந்து வருகிறது.

இதன் காரணமாக, ராகு, கேது பெயர்ச்சியானது கடக ராசிக்காரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சில தவிர்க்க முடியாத சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

செலவுகள் அதிகரிக்கும், கடன் சுமைகள் அதிகரிக்கும், வேலை செய்யும் இடத்தில் சங்கடங்கள், எரிச்சல் அதிகரிக்கும்.

இல்லற வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் முதல் நல்ல சாதகமான பலன்கள் கிடைக்கும். இருப்பினும் சில சமயங்களில் வேலை செய்யும் இடத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பீர்கள்.

அலைச்சல் அதிகரிக்கும், மனநிம்மதி இல்லாமல் இருப்பீர்கள், சில விடயங்களில் யோசித்து செயல்படுங்கள். ஆபத்தான வேலைகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி விடயங்களில் சிக்கல் நிலை தோன்றும். வியாபாரத்தில் பண ரீதியிலான பிரச்சினை ஏற்படும்.

தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது, மன உளைச்சல் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீன ராசி

மீன ராசியினருக்கு ஏழரை சனியின் ஆரம்ப நிலையாகும். இதனால் சனி ஜென்ம ராசியிலேயே வருகிறார்.

இதனால், நிதி நிலையில் சிக்கல் ஏற்படும். இல்லற வாழ்வில் பிரச்சினை ஏற்படும். மனைவியோடு வாக்குவாதம் ஏற்படும், அமைதியற்ற சூழல் நிலவும், பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். வேலையில் மிகுந்த கவனம் தேவை.