இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 01 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி).
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய பலன்கள்
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எதிர்பார்ப்புக்கு மீறிய சில விஷயங்கள் நடக்கக்கூடும். எந்த ஒரு முக்கிய முடிவுகளிலும் நெருங்கியவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. பண ரீதியான விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புது அறிமுகங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிதாக நினைத்து கோபப்பட வேண்டாம். கணவன் மனைவிக்குள் வார்த்தைகளில் இனிமை இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல உறவுகளை இழக்க வாய்ப்பு உண்டு எச்சரிக்கை தேவை. முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதை அலைபாய விடாதீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் ஜாக்கிரதையாக எடுப்பது நல்லது. புதிய நண்பர்களுடைய சேர்க்கை மனதிற்கு இனிமையை கொடுக்கும். போட்டிகளை தாண்டி உங்களுடைய வெற்றியை தக்க வைக்க கூடுதல் உழைப்பு தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கு உடன் இருப்பவர்கள் உதவி செய்வார்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கவனம் சிதறுவதற்கு வாய்ப்புகளை கொடுக்காதீர்கள். விழிப்புடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. இடமாற்றம் சிலருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வீண் அலைச்சலை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வளர்ச்சி தடை இல்லாமல் முன்னேற்றம் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும் வகையில் அமையும். தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதனையாளராக மாறக்கூடிய முயற்சிகளை செய்வீர்கள். மனக்குழப்பம் தீர்ந்து தெளிவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிதறாது. புதிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்கு அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கவனமுடன் இருக்கக் கூடிய நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத நபர்களிடம் முன் கோபத்தை காண்பிக்காதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுடைய தேவைகளை முன்னின்று பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு பண ரீதியான பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. சுப காரியங்களில் நீங்கள் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். சின்ன சின்ன பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கடுமையான உழைப்பை கொடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். வாகன ரீதியான வீண் விரயங்கள் வரலாம் கவனம் வேண்டும். வேலையில் அவசரம் காட்ட வேண்டாம் பின்பு இரண்டு வேலையாக செய்ய வேண்டி இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே பேசி பேசி பிரச்சனையை பெரிதாக்காதீர்கள். பெரிய தொகையை கையில் வைத்துக் கொள்ளாதீர்கள் மீன் செலவாகிவிடும். உங்களுடைய திறமையை மூலதனமாக கொண்டு முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு பலம் அறிந்து செயல்படக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. குறிப்பிட்டு சில இடங்களில் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தேவையற்ற பகைமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.