இரண்டு ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 02 ஆம் நாள் சனிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி).இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்க கூடும்.

சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனித்தன்மையை நிரூபிக்க வேண்டிய கால கட்டமாக இருக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் பிறக்கும்.

உங்களுடைய முற்போக்கு மனப்பான்மை பல வெற்றிகளை தேடித் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சகோதரர்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பார்த்து நிதானமாக செலவு செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கு தொடர்பான விஷயத்தில் சாதக பலன் உண்டு.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வர்த்தக ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

புதிய தொழில்நுட்பங்களை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வைராக்கியத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்டும் யோகமுண்டு.

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உத்யோகஸ்தர்களுக்கு சுயபுத்தி அல்லது சொல்புத்தி தேவை. இரண்டும் இல்லையென்றால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கிய முன்னேற்றம் உண்டு.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேரத்தை திட்டமிட்டு செலவிடக் கூடிய அமைப்பு உண்டு.

பழைய இடங்களில் இருந்து கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ளுங்கள்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அன்புக்கு மற்றவர்கள் தகுதியானவர்களா? என்கிற சந்தேகம் உங்களுக்கு எழக்கூடும். உங்களை சுற்றி இருப்பவர்களே உங்களுக்கு பிரச்சனைகளை விளைவிப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் தன்னிறைவு பெறுவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு நீங்கள் திட்டமிட்டு எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்துவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்தால் நேர இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்க வேண்டிய விஷயம் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் உண்டு.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விஷயங்களில் பலனாக மன உளைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் சுமையை சுமக்க வேண்டி இருக்கும்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அறிவாற்றல் சிறப்பானதாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடின உழைப்பு வெற்றியை கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பல தடைகளைத் தாண்டிய வளர்ச்சி இருக்கப் போகிறது என்பதால் அதிகம் வியர்வை சிந்த வேண்டி இருக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் உன் இறங்கி காணப்படும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பு நிலை அடையும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பரிசுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.