ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
இதன்படி, இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 03 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி).
இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,.
மேஷம்
நாளைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உற்சாகமும் கேளிக்கையும் நிறைந்திருக்கும். திரைப்படங்கள் பார்த்தல், பாடல்கள் கேட்டல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
நீங்கள் பணிகளை திட்டமிட்ட படி குறித்த நேரத்திற்குள் முடிப்பீர்கள். அதனால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
பணவரவு அதிக அளவில் காணப்படும். அதை நீங்கள் ஆக்கப்பூர்வமான காரியத்திற்கு செலவு செய்வீர்கள்.
ரிஷபம்
நாளை எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. நெகிழ்வான அணுகுமுறை உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
உங்கள் அன்றாட நிகழ்வுகளில் தாமதங்கள் ஏற்படும். அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
கூடுதல் வேலைச் சுமைகள் காணப்படும். இதனால் கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்குள் செய்ய இயலாமல் போகும்.
பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
மிதுனம்
நாளை சிறப்பான நாளாக அமையாது. நாளைய நாளை திட்டமிட வேண்டும். சில சௌகரியங்களை இழக்க நேரலாம். முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல.
பணிச்சுமை அதிகமாகக் காணப்படலாம். கூடுதல் வேலைகள் காரணமாக பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். மி
வீணான செலவுகள் காணப்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பீர்கள்.
கடகம்
நாளை செயல்பாடு குறைவாக காணப்படும். உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.
குழப்பமான மனநிலை காணப்படும். நாளை எடுக்கும் முக்கியமான முடிவுகள் தவறானதாக அமையும்.
பணியில் வளர்ச்சி குறைந்து காணப்படும்.பணிச்சுமை அதிகமாக காணப்படலாம். உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பதற்கு நீங்கள் சரியாக திட்டமிட வேண்டும்.
நிதி வளர்ச்சிக்கு நாளைய நாள் சாதகமாக இருக்காது.போதிய பணம் சேமிக்க நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிம்மம்
மிகுந்த முயற்சியின் மூலம் நாளைய தினத்தை சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு நீங்கள் நாளை சரியாக திட்டமிட வேண்டும்.
உங்கள் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் கடமை உணர்வுடன் சுயநலமின்றி உங்கள் இலக்குகளை அடைய பணியாற்றுவீர்கள்.
நாளை பணம் அதிக அளவில் காணப்படும். அதை நீங்கள் ஆக்கப்பூர்வமான காரியத்திற்கு செலவு செய்வீர்கள்.
கன்னி
நாளை சிறப்பான நாள். உங்களைச் சுற்றி இருக்கும் வேலைகளில் மிகவும் மும்மரமாக காணப்படுவீர்கள்.
உங்கள் முயற்சிகளில் நற்பலன்களைப் பெற நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
உங்கள் செயல்பாட்டின் மூலம் மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
நாளை உங்கள் பொறுப்புகளை எதிர்கொள்ளும் அளவிற்கு உங்களிடம் பணம் காணப்படும். புதிய முதலீடு போன்ற முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
துலாம்
நாளை அதிகமான செயல்பாடுகள் காணப்படாது. உங்கள் நிலையில் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள். நற்பலன்களைக் காண பொறுமை மிகவும்அவசியம். மனக்குழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள்.
பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை திறமையுடன் ஆற்றுவதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகின்றது.
போதுமான பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு. இதனால் சேமிப்பு குறையும். அதிர்ஷ்டம் குறைவான நாள்.
விருச்சிகம்
நாளைய தினம் நற்பலன்களை அளிக்கும் வகையில் சாதகமாக அமையாது. பலன்கள் மெதுவாகக் கிடைக்கும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் வெற்றி காணலாம்.
பணிச்சுமை அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம்.
விலைமதிப்பு மிக்க பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.அவற்றை இழப்பதற்கான சாத்தியம் உள்ளது.பண இழப்பிற்கான வாய்ப்பும் உள்ளது.
தனுசு
நாளை சிறப்பான நாளாக காணப்படும். உங்கள் இலட்சியங்களில் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவீர்கள்.
உங்கள் சகபணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
பணவரவு சிறப்பாக காணப்படும். அதிர்ஷ்டமான நாள்.உங்கள் சேமிப்பு உயரும்.
மகரம்
நாளை சாதாகமான நாளாக இருப்பதை காண்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் நிறைய சாதிப்பீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் புதுமையான கருத்துக்களை கொண்டிருப்பீர்கள். அதற்கு முயற்சி எடுப்பீர்கள். ம
பணியைப் பொறுத்தவரை திருப்திகரமான நிலை இருக்கும். உங்கள் தரமான பணிகள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும்.
பணவரவு சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலைமை உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். ஆன்மீக் காரியங்கள் உங்களுக்கு ஆறுதலைத் தரும்.
கும்பம்
நாளை மன அழுத்தம் காரணமாக அசௌகரியங்கள் காணப்படும். மனஅழுத்தத்தைக் குறைக்க இசையை கேளுங்கள் அல்லது திரைப்படங்களைப் பாருங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு அதன்படி வேலை செய்வதன் மூலம் வளர்ச்சி காணலாம்.
பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத செலவுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
மீனம்
நாளை வளர்ச்சியில் தடைகள் காணப்படும். நீங்கள் சவால்களைத் தாண்டி சமாளிப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். சில சமயங்களில் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். உங்கள் லட்சியங்களை அடைவதில் தாமதங்கள் ஏற்படும்.
உங்கள் பணியில் தடைகள் காணப்படும். பணிச்சுமை இருப்பதனால் சற்று பின்தங்கிய நிலை காணப்படும். அதிர்ஷ்டத்தை நம்புவதை விட கடின உழைப்பை நம்புங்கள். மீ
பணப்புழக்கம் குறைந்து காணப்படும். கூடுதல்பொறுப்பு காரணமாக அதிக செலவினங்கள் காணப்படும்.