மகிழ்ச்சிக்கடலில் மூழ்கப்போகும் 3 ராசியினர்..! யாருக்கெல்லாம் விபரீத யோகம் தெரியுமா..! ஆனால் கும்பத்திற்கு ?.. இன்றைய ராசி பலன்கள்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 04 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி).

இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,.

மேஷம்
இன்று நடப்பவை அனைத்தும் சுமுகமாக இருக்கும். உங்கள் இலக்குகள் நிறைவேறுவதைக் காண்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இனிமையாகப் பேசி பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

உங்கள் பணியை சிறப்பாக ஆற்றி பிரகாசிப்பீர்கள். உங்கள் திறமைகளைப் பணியில் வெளிப்படுத்துவீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள்.

எதிர்பாராத வகையில் நாளை உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வகையான பண வரவு உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும்.

ரிஷபம்
இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. தைரியம் குறைந்து காணப்படும்.உங்கள் வளர்ச்சிக்காக மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்

உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். அதன் காரணமாக உங்கள் மேலதிகாரிகளுடன் சில அசந்தர்ப்பமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும்.

பண வளர்ச்சி சாதகமாக இருக்காது. ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்.

மிதுனம்
இன்று உங்களிடம் காணப்படும் அவநம்பிக்கை உங்கள்ஆற்றலை குறைக்கும். உங்கள் நம்பிக்கைக்கு புத்துணர்ச்சி ஊட்டினால் சாதகமான பலன்களைக் காணலாம்.

அதிகப்படியான வேலையின் காரணமாக கவலைகள் ஏற்படும். ஆரோக்கியக் குறைபாடு காரணமாக உங்கள் பணிகளை விரைவாக ஆற்ற முடியாது.

பண வரவிற்கான அதிர்ஷ்டம் குறைவு. பணத்தை கவனமுடன் கையாள வேண்டும்.

கடகம்
உங்கள் இலக்குகளை முடிப்பதற்கான சாதகமான சூழ்நிலைகள் நாளை அமையாது. நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் சமயோஜித புத்தி மூலம் நாளைய நாளில் உங்கள் இலட்சியங்களை அடைய வேண்டும்.

அதிக வேலை காரணமாக சோர்ந்து போவீர்கள். எனவே உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைக்கவும். அவ்வாறு செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்

பண வரவு குறைந்து காணப்படும். பணத்தை கவனமுடன் கையாள வேண்டும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் உங்களிடம் காணப்படாது.

சிம்மம்
இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய பரந்த நோக்கு உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும்.

பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் சக பணியாளர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.

பண வரவு அதிகரித்து காணப்படும். உங்களிடம் உள்ள பணம் உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

கன்னி
இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். நாளை ய நாளை நீங்கள் உங்கள் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.

குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடிப்பீர்கள். நீங்கள் வேலையில் பரபரப்புடன் காணப்படுவீர்கள்.

நிதிநிலை சிறப்பாக காணப்படும். உங்கள் சொத்துக்களை விரிவு படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

துலாம்
உங்கள் செயல்களை ஆற்றுவதில் இன்று சில தடங்கல்கள் ஏற்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நேர்மறையான போக்கின் மூலம் நல்ல பலன்களைக் காணலாம்.

உங்கள் பணியில் தவறுகள் நேரலாம். உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

நாளை செலவினங்கள் அதிகமாக காணப்படும். தேவையற்ற மற்றும் வீணான செலவுகளால் மனதில் கவலை ஏற்படும்

விருச்சிகம்
நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும். அதனால்உங்கள் நேரம் விரயமாகும். உங்கள் ஆற்றல் குறைந்து காணப்படும். நம்பிக்கையுடன் செயலாற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும்

இன்று சவால்கள் நிறைந்திருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. திறமையுடன் பணியாற்ற திட்டமிடல் அவசியம்.

பண வரவு காணப்பட்டாலும் உங்களால் சேமிக்க இயலாது. தேவையற்ற செலவினங்கள் அதிகமாக காணப்படும்.

தனுசு
இன்று சுமுகமான நாளாக இருக்கும்.முயற்சியின் மூலம் நாளைய நாளை சாதகமான நாளாக ஆக்கிக் கொள்ளலாம். உங்களிடம் சிறந்த உறுதி காணப்படும்.

உங்கள் முயற்சி மூலம் நாளை பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

நிதி வளர்ச்சி சீராக காணப்படும். நாளை கணிசமான தொகை சேமிப்பீர்கள்.

மகரம்
இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும் உங்களிடம் போதிய ஆற்றலும் உற்சாகமும் காணப்படும். மொத்தத்தில் அனைத்து விதத்திலும் சிறப்பான நாளாக இருக்கும்.

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும். பணிகளை அனுபவித்து செய்து மகிழ்வீர்கள்.

நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மை காணப்படும்.

கும்பம்
இன்று சோம்பலான மனநிலையில் காணப்படுவீர்கள். உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். குழப்பங்களை ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன்செயலாற்றுவது நன்மை தரும்.

பணிச்சுமை அதிகமாக காணப்படும்.உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் நாளை கிடைப்பது அரிது.

பண இழப்பிற்கான வாய்ப்புகள் அதிகம். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.

மீனம்
இன்று சிறப்புடன் செயலாற்ற நம்பிக்கையும் புத்துணரச்சியும் தேவை. தியானம் மற்றும் ஸ்லோகம் கேட்பதன் மூலம் இது சாத்தியம்.

பணிவளர்ச்சி சுமுகமாக இருக்காது. அதிகமான பணிகள் சவாலானதாக காணப்படும்.

நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்புகளும் அதிகம்.