தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 05 ஆம் நாள் செவ்வாய்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் எதிர்பார்க்கும் வருமானம் பெருகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமயோஜித புத்தியால் அனுகூல பலன் கிடைக்கும். எதையும் பெரிதாக போட்டு அலட்டிக் கொள்ளாமல் இலகுவாக எடுத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய போகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறும். சுய தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்களுடைய உதவி நண்பர்களுக்கு தேவைப்படலாம்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். சுய தொழிலில் மந்தநிலை தொடர்ந்து நீடிக்கும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை வலுவாகும். சுயமரியாதையை கட்டிக் காக்க முயற்சி செய்யக்கூடும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் இதனால் சோர்வுற வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருவது வரட்டும் என்கிற மனப்பான்மை இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணத்தொகை வருவதற்கு தாமதம் ஆகலாம் என்பதால் பொறுமை காப்பது நல்லது.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களை கையாளக் கூடிய சூழ்நிலை நிலவும். முடிவுகள் சாதகமாகும்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற நபர்களின் அறிமுகத்தை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன் யோசனை தேவை.

அவசர முடிவுகள் சிக்கலில் விடக்கூடும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்தி உண்டு.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற செலவுகள் வந்து சேரும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்யம் சீராகும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள எதையும் ஒன்றுக்கு பல முறை சிந்தித்து முடிவெடுங்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சிக்கனம் கடைப்பிடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்கக்கூடிய திறன் தேவை. குடும்ப பிரச்சினைகளை வெளியில் பேசாமல் இருப்பது நல்லது.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பேச்சில் பணிவு தேவை.

தெய்வத்தின் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்டும் யோகம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு பெறுவீர்கள்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதக பலனை கொடுக்கக் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.