ராஜயோகத்திலுள்ள ராசியினர்: இனி இவர்களுக்கு பண அதிர்ஷ்டம் தான்..! இன்பத்தில் மூழ்கப்போகும் 4 ராசியினர் – இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 06 ஆம் நாள் புதன் கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

மேஷம்
இன்றைய நாள் மேஷம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணிகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அமைதியான மனநிலை இருந்தால் இல்லறத்தில் நல்லிணக்கம் பின்பற்றலாம். வரவு செலவு இரண்டுமே காணப்படும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும்.

ரிஷபம்
பொறுமையாகவும் இருக்க வேண்டும். உயரதிகாரர்களிடம் நிகழும் பிரச்சனை காரணமாக பணியிடம் மகிழ்ச்சியாக இருக்காது. இதனை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்படும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எண்ணம் தோன்றும். பணவரவு திருப்தியாக இருக்காது. பணஇழப்பு ஏற்படலாம் அதனால் பணத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதுகு வலி மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வது நல்லது. பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். உயரதிகாரர்களிடம் பிரச்சனை ஏற்படும். நாளைய நாள் காதலுக்கு உகந்த நாளாக இருக்காது. நெருங்கிய உறவுகளிடம் புரிதல் குறைவாக இருக்கும். பணவரவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது. பணத்தை பொறுத்தவரை முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

கடகம்
இன்றைய நாள் தைரியமாகவும், மன உறுதியோடும் செயல்பட வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட இருப்பதற்கு கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் தொப்புள்கொடி உறவு மற்றும் நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கால் மற்றும் தொடை வலி ஏற்படும்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகளை கவனமாக கையாள்வதன் மூலம் வெற்றி காணலாம். உங்கள் சக பணியாளர்களிடம் பிரச்சனை ஏற்படும். இல்லறத்தில் அமைதியான சூழல் நிகழாது. பணவரவு மகிழ்ச்சியாக இருக்காது. குடும்பத்திற்காக செலவு செய்ய நேரிடும். உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
இன்றைய நாள் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். பணிகள் அதிகமாக இருக்கும். குறித்த நேரத்தில் பணியை முடிக்க வேண்டும். குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். பணவவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். பதற்றம் காரணமாக தலைவலி ஏற்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. எந்த செயலிலும் விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்கவும். அமைதியாக இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் வீண்விவாதங்களை தவிர்க்கவும். பணவரவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும். பதற்றம் மற்றும் அதிக வேலை காரணமாக உடல் வலி ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி வளர்ச்சி ஏற்படும். அனாவசியமான செலவுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையாக இருக்க வேண்டும். பணி சம்மந்தப்பட்ட பயணம் ஏற்படும். உங்கள் தொப்புள்கொடி உறவு மற்றும் நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்படும். இதனை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவு குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும்.

மகரம்
இன்றைய நாள் மகரம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம், இறக்கத்தோடு இருக்கும். ஆன்மிக ஈடுபாட்டில் இருப்பது மன ஆறுதல் கிடைக்கும். பணியில் தவறுகள் ஏற்படும். கவனமாக பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

கும்பம்
இன்றைய நாள் கும்பம் ராசிக்காரர்கள் பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பணியில் கவன குறைவு ஏற்படும். பொறுமையாகவும், கவனமாகவும் பணியாற்ற வேண்டும். நெருங்கிய உறவுகளிடம் வீண்விவாதம் மற்றும் கருத்து வேறுபாடு காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். அனாவசியமான செலவுகளை தவிர்க்கவும். பதற்றம் காரணமாக ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும்.

மீனம்
மீனம் ராசிக்காரர்கள் இன்றையநாள் பணியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். பணிகள் கஷ்டமாக இருக்கும். இது உங்களுக்கு கவலையை தரும். குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எண்ணம் தோன்றும். பணவரவு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. பண இழப்பு நேரிடும் அதனால் பணத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.