குரு மற்றும் ராகுவால் நீங்கும் சண்டாள தோஷம்- அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்…

குரு மற்றும் ராகு ஏற்படுத்திய சண்டாள தோஷம் தற்போது நீங்குவதால், 3 ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைய இருக்கின்றனர்.

சண்டாள தோஷம்
முன்னதாக மேஷ ராசியில் ராகு பயணித்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் பிரவேசித்துள்ளார்.

குரு மற்றும் ராகு இணைந்து சண்டாள யோகம் அல்லது சண்டாள தோஷம் உருவாகின்றது. இதன் காரணமாக வலிமையிழந்த குரு தற்போது சண்டாள தோஷம் நீங்கியுள்ளதால், அஸ்வினியிலிருந்து பரணி நட்சத்திரத்திற்கு நுழைகின்றார்.

ஏற்கனவே ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் இருப்பதால், தற்போது சண்டா தோஷம் நீங்குகின்றதாம். இதனால் 3 ராசியினருக்கு எதிர்பாராத ராஜயோகம் காணப்படுகின்றது. அவை எந்ததெந்த ராசி என்று தற்போது காணலாம்.

மிதுனம்
குரு சண்டாள தோஷம் நீங்குவதால் இன்றிலிருந்து மிது ராசியினர் அமோக பலன்களை பெறுகின்றனர். மேலும் மிதுன ராசியின் லக்ன வீட்டில் புதாதித்ய ராஜயோகமும், பத்ரா ராஜயோகமும் உருவாவதால், வியாபாரம் செழிப்பதுடன், கணிசமான லாபத்தினை பெறலாம். அலுவலக வேலையிலும் நல்ல முன்னேற்றத்தினை காணலாம்.

கடகம்
கடக ராசியில் இந்த நேரம் மதிப்பும் மரியாதையும் அளிப்பதுடன், பணத்தை ஈட்டுவதிலும் கவனம் செலுத்துவீர்கள். திடீர் பயணங்களுக்கு வாய்ப்பு உள்ள நிலையில், எதிர்பாராத வகையில் பணம் கை வந்து சேரவும் செய்கின்றது.

அலுவலக வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடத்தில் நல்ல பெயர் வாங்குவதுடன், நல்ல முன்னேற்றத்தினையும் காணலாம்.

சிம்மம்
சிம்ம ராசியினைப் பொறுத்தவரையில் பொருளாதார ரீதியாக நன்மைகள் கிடைப்பதுடன், குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் பெருகுகின்றது. கிடப்பில் கிடந்த வேலைகள் அனைத்தும் சுலபமாக முடியும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இந்நேரம் மிகவும் சிறந்த நேரமாகும்.