அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் 3 ராசியினர் – யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..! ஆனால் மிதுன ராசிக் காரர்களுக்கு…

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, இன்று மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 07 ஆம் நாள் வியாழக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி).

இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,.

மேஷம்
இன்று நீங்கள் கோவில் விழாக்களில் பங்கு கொள்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். திருப்தி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

பணிச்சுமை அதிகமாக காணப்படும். இதனை சமாளிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்

கூடுதல் செலவினங்கள் ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறய அளவில் கடன் வாங்குவீர்கள்.

ரிஷபம்
இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆற்ற வேண்டிய செயல்கள் அதிகமாக இருக்கும். அதிக முயற்சியின்றி உங்கள் இலக்குகளை அடைவீர்கள். பரந்த நோக்குடன் இருப்பீர்கள். புதிய கருத்துகளை கொண்டிருப்பீர்கள்.உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பே பணிகளை முடிப்பீர்கள். இதற்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். அதிகமான பணம் சேமிப்பீர்கள்

மிதுனம்
இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. வெற்றியை நோக்கி உங்கள் இலக்குகளை அமைத்துக் கொள்வது சிறந்தது. அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்.

பணியில் யதார்த்தமான அணுகுமுறை வெற்றியை அளிக்கும். இதன் மூலம் எளிதில் வெற்றி பெறலாம்.

நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. கூடுதல் செலவினங்கள் ஏற்படும். அது சுமையாக காணப்படும். கவலையை உண்டாக்கும்.

கடகம்
இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் அணுகுமுறையில் உறுதி மிகவும் அவசியம்.

பணிச்சூழல் திருப்திகரமாக இருக்காது. நாளை காணப்படும் பணி இறுக்கம் உங்களை கவலைக்குள்ளாக்கும். உங்கள் பணி வழிமுறைகளை திட்டமிட வேண்டும்.

பண வரவிற்கான சாத்தியம் உள்ளது. பணத்தை கவனமாகவும் சாதுர்யமாகவும் செலவு செய்ய வேண்டும்.

சிம்மம்
இன்று ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. இதனால் தன்னம்பிக்கையும் உறுதியும் இழந்து காணப்படுவீர்கள். மாற்றங்களும் பயணங்களும் காணப்படும். நாளை உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் பணிகளை முறையாகச் செய்ய வேண்டும். பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்

பணப்பற்றாக்குறை காணப்படும். உங்கள் உடனடித் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

கன்னி
இன்றைய நாள் வரவேற்கத்தக்கதாக இருக்காது. சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். உணர்ச்சி வசப்ப்டுவீர்கள். அந்தச் சமயங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.

உங்கள் செயல்திறனில் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்களின் பணியாற்றும் முறை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

பணபுழக்கம் அதிகமாக காணப்படும். பயனுள்ள வகையில் சேமிப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். நிதிநிலையில் சுதந்திரமான நிலைமை காணப்படும்.

துலாம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள்.

உங்கள் சக பணியாளர்கள் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார்கள். புதிய வேலைக்கான வாய்ப்பு உள்ளது. பயணங்கள் ஏற்படலாம்

உங்கள் கடின உழைப்பின் மூலமாக ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வகையில் பண வரவு காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது. நாளை அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

பணிகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் பணியாற்றும் முறையை திட்டமிட்டு செயலாற்றுங்கள்.

நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக காணப்படாது. கூடுதல் செலவினங்கள் ஏற்படலாம்.

தனுசு
ஆன்மீக நாட்டம் வளர்ச்சியையும் ஆறுதலையும் தரும். நாளைய நாளை சிறப்பானதாக ஆக்க புது வழிகள் காண்பீர்கள். அவசர முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள். அதனால் எந்தப் பயனும் கிடைக்காது.

உங்கள் அன்றாட பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிதியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். நாளை காணப்படும் பணப்பற்றாக்குறை உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மகரம்
இன்று சிறப்பான நாள். சுறுசுறுப்புடனும் மும்மரமாகவும் காணப்படுவீர்கள். நற்பலன்கள் கிடைக்கும்.

பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணியில் நற்பெயர் கிடைக்கும்.

நிதிவளர்ச்சி சீராக காணப்படும். நீங்கள் கணிசமான தொகை சேமிப்பீர்கள்.

கும்பம்
இன்று ஆன்மீக அணுகுமுறையை நீங்கள் பற்றிக்கொள்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கையால் சாதனை புரிவீர்கள். அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் நாள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்கள். உங்களின் இந்த அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.

பண வளர்ச்சி சிறப்பாக காணப்படும். சலுகை அல்லது ஊக்கத்தொகையாக பணம் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

மீனம்
நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும் அளவிற்கு நாளைய தினம் சாதகமாக இருக்காது. மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரலாம். பதட்டப்படாமல் பணிகளை திட்டமிடுங்கள்.

பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்படலாம். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.