ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
இதன்படி, இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 09 ஆம் நாள் சனிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மேஷம்
உங்கள் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது சிறந்தது. தொழில் உத்தியோகம் பொறுத்தவரை அலுவலகத்தில் நாளைய நாள் உங்களுக்கு பணிச்சுமை அதிமாக காணப்படும்.
கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி நிலவ உங்கள் உரையாடல்களில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது.
ரிஷபம்
உங்களது விருப்பங்கள் சில நிறைவேறும். அதனால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் தகவல் தொடர்பில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதில் கவனம் தேவை. உறவில் நல்லிணக்கம் பராமரிக்க இது மிகவும் அவசியம்.
தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பணி தொடர்பான பயணம் காணப்படுகின்றது. மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
நல்ல பலன்கள் கிடைக்க கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை உங்கள் பணிகளை மிக எளிதாக செய்து முடிப்பீர்கள்.
கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வளர்ச்சிகரமானதாக இருக்கும்.
கடகம்
மிகவும் கவனமாக கையாளுவீர்கள். குறிப்பாக இன்றைய நாள் உங்களுக்கு தகுந்தது போல் சாதகமாக பயன்படுத்திக்கொள்வீர்கள். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பணியிடத்தில் மாற்றங்களுக்கான சாத்தியம் உள்ளது. நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள்.
இதனால் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். கணவன் மனைவி உறவிக்குள் சில கருது வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை சுமாராக தான் இருக்கும்.
சிம்மம்
முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் இல்லை. தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பணிகள் சிறப்பானதாக காணப்படாது.
கணவன் மனைவி உறவுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
மேலும் இன்று உங்களிடம் பணம் புழக்கம் குறைந்து காணப்படும்.
கன்னி
உங்கள் செயல்களை நம்பிக்கையோடு செயல்படுத்த வேண்டும். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பணியிடச் சூழல் பொதுவாக உங்களுக்கு இன்று சிறப்பாக இருக்கும்.
கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி நிலவ சில விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது சிறந்தது.
மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். என்றாலும் பணப் பரிவர்த்தனைகளை கவனமாகக் கையாளவும்.
துலாம்
உங்களின் அனுசரனையான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பணியிட சூழல் தங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
கணவன் மனைவி உறவுக்குள் காதல் உணர்வு அதிகமாக காணப்படும். மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை முன்னேற்றகரமானதாக காணப்படும்.
விருச்சிகம்
குடும்பத்தின் வளர்ச்சிக்கான செயல்களை தொடங்க உகந்த நாள். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை உங்களின் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
கணவன் மனைவி உறவுக்குள் நாள் புரிதல் காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வளர்ச்சிகரமானதாக இருக்கும்.
தனுசு
வளர்ச்சி காண்பதற்கு உங்கள் ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்துங்கள். உங்கள் தன்னம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்லுறவு பராமரிப்பது நல்லது. தொழில் உத்தியோகம் பொறுத்தவரை உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள்.
கணவன் மனைவி உறவுக்குள் சில தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பூர்வீகச் சொத்து மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரவு கிடைக்கும்.
மகரம்
உங்கள் புத்திசாலித் தனத்தை நீங்கள் நன்கு பயன்படுத்தினால் நீங்கள் அதிகம் சாதிக்கலாம். சுய முன்னேற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை லாபகரமான பலன்கள் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. இதனால் உங்களிடம் திருப்தி காணப்படும்.
கணவன் மனைவி உறவுக்குல் உங்களின் இனிமையான போக்கின் காரணமாக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணம் வரவு சிறப்பானதாக இருக்கும்.
கும்பம்
நீங்கள் குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும். இதற்காக உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை இதற்கு ஒதுக்குவீர்கள். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பதட்டம் நிறைந்து காணப்படும். இதனால் கவனமின்மை காணப்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவி உறவுக்குள் மற்றவர்களை அரவணைத்து செல்லும் அணுகுமுறை மூலம் உறவு வலுப்படும். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை அதிக பணம் சம்பாதிக்க இயலும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
மீனம்
உங்கள் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும். இத்தகைய போக்கை முற்றிலும் தவிர்த்து அமைதியாக இருக்க முயலுங்கள். தொழில் உத்தியோகம் பொறுத்தவரை பணியில் பதட்டம் காணப்படும். பொறுமையும் நேர்மையும் வளர்ச்சியை உருவாக்கித் தரும்.
கணவன் மனைவி உறவுக்குள் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். பொறுமையாக இருந்து அமைதியாக கையாள்வது அவசியம். மேலும் இன்று உங்கள் நிதிநிலை பொறுத்தவரை அதிக செலவுகள் காணப்படும். நிதி நிலையில் ஸ்திரத்தன்மை பராமரிப்பது கடினமாக உணர்வீர்கள்.